கடந்த ஆண்டு இந்தியா
முழுவதும் 251 ரூபாய்க்கு செல்பேசி விற்பனை செய்யபோவதாக ரிங்கிங் பெல் நிறுவனம் அறிவித்தது.
இது நாடு முழுவதும் பெரும் வரவேற்ப்பை பெற்றதோடு, கோடி கணக்கானோர் முன் பதிவு செய்ய
துவங்கினர். ஆனால் முன் பதிவு செய்தவர்கள் சிலருக்கு மட்டுமே
செல்பேசி கிடைத்தது. இந்நிலையில் அந்த செல்பேசி வாங்கி விற்ற அய்யம் என்னும் ரிங்கிங்
பெல் நிறுவன தலைவர் கோயல் மீது தற்போது ஊழல் வழக்கு தொடர்ந்துள்ளது. அய்யம் நிறுவனம் ரிங்கிங் பெல் நிறுவனத்திற்கு
30 லட்ச ரூபாய் வழங்கியதாகவும், ஆனால் 13 லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்பேசிகள் மட்டுமே
வழங்கப்பட்டுள்ளதாகவும் அய்யம் நிறுவனம் சார்பில் கூறப்படுகிறது. 7 கோடி பேர் இந்தச்
செல்பேசி வாங்க முன் பதிவு செய்ததாகவும், அதில் 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே செல்பேசி
வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் சுமார் 16 கோடி ஊழல் செய்துள்ளதாக ரிங்கிங்
பெல் நிறுவனம் மீது காசியாபாத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



