Show all

பனிரெண்டு பணியாட்களுடன் படிக்க அனுப்பும் பணக்கார இந்திய தந்தை! செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்துள்ள தன்மகளை

27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவை சேர்ந்த பணக்காரத் தந்தை ஒருவர் ஸ்காட்டிஷ் மலைப்பகுதியில் அவரது மகள் சொந்த வீட்டில் இருப்பதை  போன்று இருப்பதை உறுதி செய்வதற்காக  பல கோடி செலவழித்து அவருடன் அனுப்பி வைக்க அதற்குரிய வேலையாட்களைத் தேடி வருகிறார்.

கோடீசுவரரின் மகள் ஸ்காட்லாந்தில் செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்திருக்கின்றார். கல்லூரியின் கடினமான சூழ்நிலைகளைச் சமாளிக்க அவருக்கு உதவி செய்ய, 12 ஊழியர்கள்  வேண்டும். ஒரு மாளிகையில் குடியிருந்து, வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை மகளுக்கு வழங்க வேண்டும். இதற்கு  விருப்பம் உள்ளவர்கள்  இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என  பெற்றோர்கள் தரப்பில் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.  இதற்கு ஆண்டு சம்பளம் 30 ஆயிரம் பவுண்டுகள் என கூறப்பட்டு உள்ளது. இது இந்திய ரூபாயில் ரூ.28.5 லட்சமாகும். 

ஒரு சமையல்காரர், ஒரு பணிப்பெண், ஒரு பணியாளர், ஒரு ஓட்டுனர், ஒரு தோட்டக்காரர், ஒரு வீட்டு மேலாளர், மூன்று வீட்டு காவலாளிகள் மற்றும் மூன்று காலாட்பணிகள் ஆகிய பதவிகளுக்கு  விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது.

ஸ்காட்லாந்தில் செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தில் படிக்கும் பெண் வாழ, ஒரு மாளிகையை வாங்கி விட்டார் அவர் தந்தை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,908.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.