Show all

தோலுரிக்கச் சுற்றி வளைக்கும் நிறுவனங்கள்! நடுவண் பாஜக அரசு ஏதோ ஒரு ஹிந்திப் பெயரில் அறிவித்த, 20இலட்சம் கோடி தொகுப்பை

நடுவண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த கிழமையில் ஏதோ ஒரு ஹிந்திப் பெயரில் ஒரு திட்டத்தின் கீழ் பல அறிவிப்புகளை வெளியிட்டார். இந்தத் திட்டத்தின் மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாய் என்றும், அதோடு ஒட்டு மொத்த இந்திய ஜிடிபியில் அது 10 விழுக்காடு எனவும் புளுகியது அம்பலமாகி வருகிறது.

08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடுவண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த கிழமையில் ஏதோ ஒரு ஹிந்திப் பெயரில் ஒரு திட்டத்தின் கீழ் பல அறிவிப்புகளை வெளியிட்டார். 

இந்தத் திட்டத்தின் மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாய் என்றும், அதோடு ஒட்டு மொத்த இந்திய ஜிடிபியில் அது 10 விழுக்காடு எனவும் சொன்னார்கள். 

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தன் கீச்சுப் பக்கத்தில் தலைமைஅமைச்சரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ. 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ 1,86,650 கோடி தான். இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும் என கீச்சு பதிவிட்டு  இருந்தார். ஆனால் அதற்குள்ளாகவே இந்திய நிறுவனங்களும் உலக நிறுவனங்கள் பலவும் நடுவண் பாஜக அரசின் ஏதோ ஒரு ஹிந்திப் பெயரில் அறிவிக்கப்பட்ட அந்த 20இலட்சம் கோடி தொகுப்பை தோலுரிக்கச் சுற்றி வளைக்கத் தொடங்கி விட்டன.

உலக வங்கியின் தரவுகள் படி இந்தியாவின் மொத்த ஜிடிபி 2.7 ட்ரில்லியன் டாலர். இதை இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் சுமாராக 202 லட்சம் கோடி ரூபாய் வருகிறது. இந்தியா, அதில் 10 விழுக்காட்டை, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு பல திட்டங்களை அறிவித்து இருப்பதாகச் சொல்கிறார்கள். 

ஆனால் ப.சிதம்பரத்தின் கணக்குப் படி 1.86 லட்சம் கோடியை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டால், மேலே சொன்ன கணக்கில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகத் தான் வருகிறது. 

ப.சிதம்பரத்தைத் தொடர்ந்து, தற்போது கோல்ட் மேன் சாக்ஸ், மோதிலால் ஓஸ்வால், பிட்ச், எஸ்பிஐ, எடல்வீஸ், பார்கலேஸ் என பல உள்நாடு மற்றும் வெளிநாட்டு தரகு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், நிதி அமைச்சர் அறிவித்த திட்டங்களில் எவ்வளவு ரூபாய் நிதி உதவி செய்து இருக்கிறார்கள், அது இந்திய ஜிடிபியில் எத்தனை விழுக்காடு என கணித்து இருக்கிறார்கள்.   

வெளிநாடு: 
கோல்ட்மேன் சாக்ஸ் - 1.3விழுக்காடு.
யூ.பி.எஸ் - 1.2விழுக்காடு. 
பேங்க் ஆப் அமெரிக்கா - 1.1விழுக்காடு.  
பிட்ச் - 1.0விழுக்காடு.  
ஹாங்காங் ஷாங்காய் பேங்கிங் கார்ப்பரேஷன் - 1.0விழுக்காடு.  
எடல்வீஸ் - 0.84விழுக்காடு.  
சி.எல்.எஸ்.ஏ - 0.8விழுக்காடு. 
பார்கலேஸ் - 0.75விழுக்காடு. 
என, இந்தியாவின் மொத்த ஜிடிபியில் இவ்வளவு தான், இந்திய அரசு நிதி உதவி அறிவித்து இருப்பதாக பல சர்வதேச தரகு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தோரணம் கட்டி தொங்கவிட்டு இருக்கிறார்கள். 

இதுவரை நடுவண் பாஜக அரசு வெள்ளைக் காக்கா பறக்கிறது என்று சொன்னால் ஆமாம் சாமி போட்டு வந்த உள்நாட்டு நிறுவனங்களுக்கு நடுவண் பாஜக அரசின் மீது இருந்த பயம் போய்விட்டது. பாஜகவைத் திறனாய்வு செய்தால், தேசவிரோதிகள் என்று பழிபோடுவார்களே அந்த பயம்தான்.

கோடிக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்களை நடுத்தெருவில் அலையவிட்டுக் கொண்டிருக்கும் பாஜகவிற்கு தேசியம், தேசத்துரோகம் பற்றி எல்லாம் பேசுவதற்கு அருகதையே இல்லையென்று ஒட்டு மொத்த இந்தியாவும் தெளிவாகப்; புரிந்து கொண்டது. அதனால் இவர்களுக்கும் பாஜகமீது பயம் போய்விட்டது. 

மற்ற கட்சிகளுக்கு வழக்கறிஞர் அணி இருப்பதுபோல பாஜகவிற்கு அறங்கூற்றுவர்கள் அணி இருக்கிறது என்று பகடி இணையத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. மற்ற மற்ற நிருவாகங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் உண்மையான தேசத்துரோகிகள், அதாவது நாட்டைக் கூறுபோட்டு தனியாருக்கு விற்றுக் கொண்டிருக்கும் தேசத்துரோகிகள் யார் என்று நன்றாகவே புரிந்து விட்டது. 

இனி பாஜகவை நடுவண் அரசில் இருந்து இறக்கவே முடியாது! மக்கள் வாக்களிக்கா விட்டாலும் அதிகாரிகள் வாக்கு எந்திரங்களை பாஜகவிற்கு வாக்களிக்க பயிற்றுவிப்பார்கள் என்ற நம்பிக்கையும் ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தாம் உள்நாட்டு தரகு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளும் பாஜகவைத் தோலுரிக்கும் வேலையைச் செய்தாக வேண்டிய கட்டாயத்தைப் புரிந்து கொண்டு விட்டன. 

உள்நாடு:
மோதிலால் ஓஸ்வால் - 1.3விழுக்காடு. 
கோட்டக் - 1.0விழுக்காடு. 
எஸ்பிஐ - 1.0விழுக்காடு.  

இவ்வளவு தான் நடுவண் பாஜக அரசு, மொத்த இந்திய ஜிடிபியில் கொரோனாவுக்கான நிதி உதவியாக செய்து இருக்கிறார்கள் என போட்டு உடைத்துவிட்டார்கள். 

நடுவண் பாஜக அரசு அறிவித்த 20 லட்சம் கோடி திட்டங்களில், பல அறிவிப்புகள் மற்றும் சில நிதி உதவித் திட்டங்கள் முன்பே நடப்பில் உள்ளவைகள் தாம். உண்மையாகவே கொரோனாவுக்காக அறிவித்த நிதி திட்டங்கள், இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 1விழுக்காடு தாம் எனச் சொல்லி இருக்கிறது ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம். 

இந்திய பொருளாதாரத்தில், குறுகிய காலத்தில், நுகர்வை பெரிதாக அதிகரிக்க உதவாது. அரசின் அறிவிப்புகளாலும், திட்டங்களாலும், இந்திய பொருளாதாரத்தில் நேரடியாக, சுமார் 2 லட்சம் கோடி நிதி புழங்கி தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனச் சொல்லி இருக்கிறார் எஸ்பிஐயின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சௌம்ய கந்தி கோஷ். 

நிர்மலா சீதாராமன் அறிவித்த 20.97 லட்சம் கோடி ரூபாயில் 1.77 லட்சம் கோடி தான், நடப்பு நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறையை ஏற்படுத்தும். இது ஒட்டு மொத்த ஜிடிபியில் வெறும் 0.8 விழுக்காடு தான். இந்த 0.8 விழுக்காட்டில் 0.34 விழுக்காட்டு பணத்துக்கான திட்டங்கள் மட்டுமே புதியவைகள். மீதமுள்ள 0.46 விழுக்காட்டு பணம் பழைய திட்டங்களில் இருந்து வருபவைகள் எனச் சொல்லி இருக்கிறது சி எல் எஸ் ஏ அமைப்பு. 

ஆக மொத்தத்தில், 5 நாட்களுக்கு நிதி அமைச்சர் வரிசையாகச் சொன்ன திட்டங்கள், பெரிய அளவில், நேரடியாக இந்திய பொருளாதாரத்தில் பணத்தை புழங்கச் செய்வதாக இல்லை, என சர்வதேச கம்பெனிகள் தொடங்கி உள்நாட்டு கம்பெனிகள் வரை எல்லோரும் சொல்லிவிட்டார்கள். இவர்கள்தாம் உண்மையான தேசத்துரோகிகளை அடையாளம் காட்டியுள்ள இந்தியப் பற்றாளர்கள். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.