11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைமை அதிகாரி சுனில் தத் உற்சாகமான ஒரு செய்தியைத் தெரிவித்தார். 4ஜி வசதியுடன் மிடுக்குப்பேசிகளுக்கு மாற விரும்பும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு வசதியாக, குறைந்த விலையில் பெரிய திரை கொண்ட மிடுக்குப்பேசிகளை தயாரிக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக நட்பு நிறுவனங்களுடன் பேசி வருகிறோம் என்று. ஒரு கோடி மிடுக்குப்பேசிகளை தயாரிக்க, அமெரிக்காவை சேர்ந்த பிளெக்ஸ் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக, சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. ரிலையன்ஸ் அடுத்த கட்ட அசத்தலுக்குத் தயாராகி விட்டது. இனி ஏர்டெல்லும், ஐடியா வோடாவும் லபோ திபோ என்று அடித்துக் கொள்ளப் போகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,013.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



