09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் வேலைக்குச் சேர்ந்த, உத்;தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு பேர், தங்களுக்கு, பாதுகாப்பு படையினர் மீது கல்லெறியும் வேலை தரப்பட்டதாக, கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். அண்மையில் சொந்த ஊர் திரும்பிய அவர்கள், தங்களை வேலைக்கு அமர்த்திய நபர், மாதம், 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவதாக கூறியதாகவும், பின், புல்வாமாவில் உள்ள தொழிற்சாலையில், தங்களை அடைத்து வைத்ததாகவும் கூறினர். ஒரு சமயம், அந்த தொழிற்சாலையில் பணியாற்றும் அனைவரையும், பாதுகாப்பு படையினர் மீது கற்களை எறியும்படி நிர்ப்பந்தம் செய்ததால், உத்தரப் பிரதேசத்திற்கு திரும்பியதாகவும் கூறினர். ஆனால் உத்தரப் பிரதேச மாநில, காவல்துறை தலைவர் ஓ.பி.சிங், இந்த தகவலை மறுத்துள்ளார்;. ஜம்மு - காஷ்மீருக்கு வேலைக்குச் சென்ற இவர்கள், அங்குள்ள தொழிற்சாலையில், சில பொருட்களை திருடியுள்ளனர். காவல்துறையினர் தேடியதும், இங்கு தப்பி வந்துள்ளனர். ஆனால், இந்த விசயத்தை மறைத்து, பாதுகாப்பு படையினர் மீது கல்லெறியும்படி, தாங்கள் நிர்ப்பந்தம் செய்யப்பட்டதாக காவல்துறையில் பொய் புகார் அளித்துள்ளனர். இது குறித்து, உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினர். இன்றைக்கு நடக்கிற நடப்புகளில் எது உண்மையோ யாருக்குத் தெரியும் என்று மக்கள் அங்கலாய்க்கிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,827.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



