Show all

காந்தி அவர்களை வெளிநாடு வாழ் இந்தியர் என்று குறிப்பிட்டார்களா ராகுலும் மோடியும்

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகிறார். நேற்று வெளிநாடு வாழ் தமிழர்கள் முன்னிலையில் உரையாற்றிய அவர், காந்தி, நேரு, அம்பேத்கர், மவுலானா ஆசாத், வல்லபாய் பேடல் போன்ற தலைவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களாக இருந்தனர் என்று கூறினார்.

இதன் எதிரொலியாக பாஜகவினர் அவரை வறுத்தெடுத்து வரும் நிலையில், மோடியும் இதே கருத்தைக் கூறியுள்ளாராம்.

நரேந்திர மோடி கடந்த ஆண்டு அமெரிக்கா சென்ற போது, அதே செப்டம்பர் மாதம், 29 அன்றுஅமெரிக்க வாழ் இந்தியர்கள் முன் பேசினார். அப்போது, காந்தியும் உங்களைப் போல வெளிநாடு வாழ் இந்தியர்தான் என்று குறிப்பிட்டாராம்.

இதன் எதிரொலியாக சமூக வலைத்தளங்களில் காந்தி வெளிநாடு வாழ் இந்தியரா? மோடியும் ராகுலும் சொல்வது நியாயமா? என்று சர்ச்சை வெடித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.