Show all

டீசல்வாங்க கடன்மேளா நடத்தியது தனியார் வங்கி! டீசலுக்குக் கடன் வாங்கும் அவலத்திற்கு, மக்களைக் கொண்டு வந்து விட்டார் மோடி

26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெரிய செலவை குறைந்த சம்பளக்காரர்கள் செய்வதற்கு கையில் காசு இருக்காது என்பதற்காக வீடுகட்ட கடன், மருத்துவச் செலவிற்கு கடன், பிள்;ளைகள் திருமணத்திற்கு கடன், பிள்ளைகள் படிப்புக்குக் கடன் என்பது போய் இப்போது வண்டிக்கு டீசல் போடுவதைக் கூட பெரிய செலவாக்கி மக்களை நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டார் மோடி.

திருச்சியில் வாகனங்களுக்கு டீசல் பெற கடன் வழங்கும் நிகழ்வில் ஏராளமான வாகன ஓட்டிகள் கலந்து கொண்டது பாஜகவிற்கு வாக்களித்து விட்டு, நாடு சந்திக்கும் அவலத்தை எண்ணி புலம்ப வேண்டியதாகி விட்டது.

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அவல நிலையில் திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்று டீசல் பெற கடன் வழங்கும் மேளாவை நடத்தியது. 

இதனால் வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள் என ஏராளமானோர் குவிந்தனர்.  
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,938.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.