மூத்த இதழியலாளர் கவுரி லங்கேஷ் கடந்த மாதம் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். முற்போக்கு சிந்தனையாளர்களைச் சுட்டுக் கொல்லும் வலதுசாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ், கவுரி லங்கேஷ் கொலையைப் தலைமை அமைச்சரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர்களின் செயல்பாடுகள் குறித்து மௌனமாக இருப்பதன் மூலம், என்னைவிட மிகச்சிறந்த நடிகர் என்பதை மோடி நிரூபித்திருப்பதாக விமர்சித்துள்ளார். தன்னுடைய ஆதரவாளர்களின் செயலை மோடி ஆதரிக்கிறாரா என பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்ற கொடூரச் சம்பவங்களில் மோடி தொடர்ந்து மௌனமாக இருந்தால், தன்னுடைய தேசிய விருதுகளை அரசிடம் திருப்பி அளிக்கவும் தயங்க மாட்டேன் எனவும் நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். கவுரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து பல இடங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



