சல்லிக்கட்டு போராட்டத்தின்
போது ஏற்பட்ட வன்முறையில் ஆட்டோவுக்கு தீவைத்த பெண் காவலர் அடையாளம் தெரிந்தது. அவர்
விரைவில் தற்காலிக நீக்கம் செய்யப்படுவார் தமிழகம் முழுவதும் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த
தமிழ்ஆண்டு5118 தைத்திங்கள் நான்காம்நாள் (17.01.2017) மாணவர்கள் திரண்டு அறப்போராட்டத்தில்
ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு சல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்கும் வகையில்
அவசர சட்டத்தை கடந்த தமிழ்ஆண்டு5118 தைத்திங்கள் பத்தாம்நாள் (23.01.2017) கொண்டு வந்தது.
சட்ட நிறைவேற்ற நாளான அன்றே மாணவர்கள் மீதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் போரட்டத்திற்கு
ஒத்துழைத்த கிராமம் மீதும் சகட்டு மேனிக்கு காவல்துறை வன்முறையில் ஈடுபடுத்தப் பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஐஸ் அவுஸ்,
திருவல்லிக்கேணி, அரும்பாக்கம், கோயம்பேடு, வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் கலவரம்
வெடித்தாகவும், இந்த போராட்டத்தின் உச்சக்கட்டமாக ஐஸ்அவுஸ் காவல் நிலையம் தீ வைத்து
கொளுத்தப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டாலும்- இதற்கிடையே காவல்துறையினரே பொதுச் சொத்துக்களுக்கு
சேதம் விளைவித்ததாகவும், வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் சமூக வலைதளங்களில் காணொளி ஆதாரங்கள் வெளிப்படுத்தப் பட்டன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பெண் காவலர் ஒருவர்
ஆட்டோவுக்கு தீ வைக்கும் காட்சியும், காவலர் ஒருவர் வாகனங்களை லத்தியால் அடித்து நொறுக்கும்
காட்சிகளும் காணொளிப் பதிவுகளாக பரவின. சமூக வலைதளங்களில் பரவிய இது போன்ற காணொளிகள்
கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பெண் காவலரும்
வாகனங்களைச் சேதப்படுத்திய காவலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பெண் காவலரும், காவலரும், தற்காலிக நீக்கம் செய்யப்பட
உள்ளனராம். இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



