Show all

கடும் தண்டனை பாசிபிள் காவல்துறை எச்சரிக்கை! மிஷன் இம்பாசிபில் பால்அவுட் பாணியில் மும்பை சாலைகளில் சாகசம் செய்தால்

17,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேற்கத்திய திரையுலகில் மிஷன் இம்பாசிபில் பால்அவுட் படம் அண்மையில் வெளியானது. இதில் கதைத்தலைவன் டாம் குருஸ், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வேகமாக தப்பிக்கும்போது, கார் மீது மோதி விழும் காட்சியில் நடித்துள்ளார். அதை பார்த்து மும்பை சாலைகளில் இளைஞர்கள் சிலர் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்து வருகின்றனர்.

அவர்களை மும்பை காவல்துறையினர் கடுமையாக எச்சரித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் கீச்சுப் பக்கத்தில் கூறும்போது, மிஷன் இம்பாசிபில் பால்அவுட் படத்தில் வருவது போன்று, மும்பை சாலைகளில் சாகசச் செயல்களில் இளைஞர்கள் ஈடுபட்டால் கடுமையான தண்டனை விதிக்கப்படும். அது பாசிபில்தான் என்று எச்சரித்துள்ளனர். மேலும் கீச்சுப் பக்கத்தில் டாம் குரூஸ் இருசக்கரத்தில் வேகமாக செல்லும் 12 வினாடி காட்சியையும் பதிவிட்டுள்ளனர்.

மேலும், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். பாதுகாப்புதான் முதன்மை, தாறுமாறாக வாகனங்களை ஓட்டாதீர்கள் என்று இளைஞர்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,867.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.