17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மெரினா கடற்கரையை யொட்டியுள்ள எழிலகம் வளாகத்தில் ஏராளமான அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள இந்திய மாநில வங்கி, பணம் வழங்கும் எந்திரத்தில் இருந்து வாடிக்கையாளர்களின் பணம் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்தது. மர்ம கும்பல் ஒன்று இந்த பணம் வழங்கும் எந்திரத்தை மட்டும் குறிவைத்து கைவரிசை காட்டியது. இது தொடர்பாக 5 பேர் அடுத்தடுத்து அண்ணாசதுக்கம் காவல்துறையில் புகார் அளித்தனர். இதுபற்றி உயர் காவல்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து திருவல்லிக்கேணி துணை ஆணையர் செல்வ நாகரத்தினம் மேற்பார்வையில், உதவி ஆணையர் ஆரோக்கிய பிரகாசம், அண்ணா சதுக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் தீபா ஆகியோரது தலைமையில் பணம் வழங்கும் எந்திரக் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. துணை ஆய்வாளர் மாணிக்கம், காவலர்கள் சங்கர், சக்தி, சதாசிவம், சாமி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் பணம் வழங்கும் எந்திரம் அருகே கமுக்கமாக கண்காணித்தனர். இந்த நிலையில் இந்திய மாநில வங்கி பணம் வழங்கும் மையத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த பீகார் கும்பல் ஒன்று தனிப்படை காவல்துறையிடம் சிக்கியது. அவர்களது பெயர் முன்னுகுமார், மனோகர்குமார் என்பது தெரிய வந்தது. அண்ணா சதுக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கொள்ளையர்கள் 2 பேரும் பீகாரில் இருந்து விமானத்தில் வந்து கொள்ளையடித்தது தெரிய வந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட கொள்ளையர்கள் காவல்துறையில் அளித்த பரபரப்பு வாக்குமூலம்: பணம் வழங்கும் எந்திர மையங்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் சிலர் பணத்தை எடுத்து முடித்த பின்னர் தங்களது பணம் வழங்கும் செயல்பாட்டை முழுமையாக முடிக்காமல் (நீக்கம் செய்வது வரை) செல்வார்கள். இதுபோன்ற நபர்களை கண்காணிப்பதற்காக திடீரென பணம் வழங்கும் எந்திர மையத்துக்குள் சென்று விடுவோம். 2 பேரில் ஒருவர் அருகில் உள்ள பணம் வழங்கும் எந்;திரத்தில் பணம் எடுப்பதுபோல நடிப்போம். அப்போது பணம் வழங்கும் எந்திரத்தில் பணம் எடுக்கும் வாடிக்கையாளரின் கமுக்க குறியீட்டு எண்ணை எப்படியாவது கண்டுபிடித்து விடுவோம். பணம் வழங்கும் எந்;;திரத்தில் முழுயையாக செயல்பாட்டை முடிக்காமல் செல்லும் நபர்கள் யார் என்பதை தெரிந்து கொண்டு கமுக்க குறியீட்டு எண்ணை மீண்டும் போட்டு பணத்தை எடுப்போம். இதுபோன்று ரூ.1½ லட்சம் வரையில் பணம் எடுத்துள்ளோம். இவ்வாறு கொள்ளையர்கள் கூறியுள்ளனர். இந்த பணத்தை கொள்ளையர்களில் ஒருவன் தனது தாயின் வங்கி கணக்கில் போட்டு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களிடம் இருந்து போலி பணம் வழங்கும் ஆதாய அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று சென்னையில் வேறு எந்த பணம் வழங்கும் எந்திர மையத்திலாவது இருவரும் கைவரிசை காட்டியுள்ளனரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பழைய பணம் வழங்கும் எந்திரங்களில் மட்டுமே இதுபோன்று நூதன முறையில் பணம் எடுக்க முடியும் என்று கொள்ளையர்கள் அதிர்ச்சி தகவலையும் கூறியுள்ளனர். சிந்தாதிரிப்பேட்டையில் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை பணம் வழங்கும் எந்திரம் இந்திய மாநில வங்கி பணம் வழங்கும் எந்திரம் போன்று பழைய பணம் வழங்கும் எந்திரம் என்றும் கொள்ளையர்கள் கூறியுள்ளனர். எனவே அங்கும் கைவரிசை காட்டப்பட்டுள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனவே இது போன்ற பணம் வழங்கும் எந்திரங்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பீகார் கொள்ளையர்கள் கடந்த 4 மாதங்களில் பலரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளனர். ஆனால் பெரும்பாலானவர்கள் புகார் அளிக்கவில்லை. இதன் மூலம் லட்சக்கணக்கான பணத்தை கொள்ளையர்கள் சுருட்டி இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பொதுவாக வட இந்தியாவில் பொருளாதார வளம் குன்றிய கீழ்தட்டு மக்கள் மிக அதிகம். வடஇந்திய அரசியல்வாதிகள் தாம் ஏதோ ஹிந்தி படித்தால் இந்தியர்கள் அனைவருக்கும் வேலை கொடுத்து விடுவது போல ஹிந்தி திணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வட இந்திய கீழ்தட்டு மக்கள் பெரும்பாலும், தென் மாநிலங்களில், பளுதூக்கும் வேலைகளில்தான் ஈடுபட்டு வருகிறார்கள். அல்லது இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஹிந்தி திணிப்பு, நீட் தேர்வு என்று தென்மாநில மக்களை வீழ்த்த முயலும் முயற்சியை அந்த மண்ணின் மக்களின் கல்வி பொருளாதார முயற்சிக்கு முயலலாம். வட இந்தியப் பொருளாதாரம் குறிப்பிட்ட சில கார்ப்பரேட்டுகள் கையில்தாம் இருக்கின்றன. தென் இந்தியாவைப் போல பரவலான கல்வி, பொருளாதார வளர்ச்சி வட இந்தியாவில் கிடையாது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,835.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



