17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பல்வேறு இன, மத, மொழியினர் வாழும் நாடுகளில் இந்தியா மிக முதன்மையான இடம் வகிக்கிறது. இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, ஒவ்வொரு தனி நபரின் தாய் மொழி குறித்த விவரங்களும் சேகரிக்கப்படுகிறது. அதன்படி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, 121,00,00,000 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மொத்தம் 19 ஆயிரத்து 569 மொழிகள் தாய் மொழிகளாக பேசப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் 22 மொழிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய மக்கள் தொகையில், 96.71 விழுக்காடு மக்கள் அதாவது 117,01,91,000 பேர்கள் இந்த 22 மொழிகளையே பயன்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 3,98,09,000 மக்களில், பத்தாயிரத்துக்கும் குறைவான மக்கள் பயன்படுத்தும் மொழிகளின் எண்ணிக்கை 121 ஆக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த 121 மொழிகளில் 99 மொழிகள் அதிகாரப்பூர்வ பட்டியலில் உள்ள மொழிகள் என்றும், மீதமுள்ள மொத்த 19327 மொழிகள் அதிகாரப்பூர்வ பட்டியலில் இல்லாத மொழிகளாகவும் கருதப் படுகின்றது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,835.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



