02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட பல்நோக்கு சிறப்பு விசாரணை முகாமை குற்றப்பத்திரிகை பதிகை செய்யும் வரை தனக்கான சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று பேரறிவாளன் தரப்பில் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் இடைக்கால மனு பதிகை செய்யப்பட்டது. இந்த மனு உச்சஅறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் ரஞ்ஜன் கோகாய், நவீன் சின்கா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் தரப்பில் வழக்கறிஞர்கள் கோபால் சங்கரநாராயணன், பிரபு ராமசுப்பிரமணியன் ஆகியோர் அணியமாகி ராஜீவ்காந்தியை கொல்வதற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் வெடிகுண்டு பற்றிய விசாரணை அறிக்கையின் நகல் ஒன்றை முத்திரை வைக்கப்பட்ட உறையில் வைத்து நடுவண் குற்றப் புலனாய்வுத் தரப்பில் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் ஏற்கனவே பதிகை செய்திருப்பதாகவும் இந்த மனுவின் மீது விரிவான விசாரணைக்கும், தங்கள் தரப்பில் விரிவான வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அறங்கூற்றுவர்கள் இந்த மனுவை அறுபது நாட்களுக்குப் பின்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,883.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



