01,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மலையாள நடிகையான அமலாபால், தமிழில் 'மைனா' படம் மூலம் மிகவும் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து, விஜய், தனுஷ், ஜெயம் ரவி என்று பெரிய கதைத்தலைவர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். அண்மையில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் அமலாபாலிற்கு அடிப்பட்டது. அதற்காக தீவிர சிகிச்சையில் ஈடுபட்டு வந்தார். மருத்துவர்கள் ஓய்வு எடுக்கச் சொல்லியுள்ளனர். இந்நிலையில், கேரளாவில் மழை வெள்ளத்தால் பலர் வீடுகளை இழந்து மிகவும் துன்பப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக தேவையான பொருட்களை வாங்கி அனுப்பியுள்ளார் அமலாபால். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,882.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



