வட மாநிலங்களில் மிகக் குறைந்த அளவிலான பெரும் பணக்காரர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், சாமியார்கள், தாதாக்கள், ஒப்பந்தக்காரர்கள், நிலபிரபுக்கள், இந்தியா முழுவதும் வண்பொருள் மற்றும் நகை விற்பனை அடகு வணிகத்தில் ஈடுபட்டு வரும் மார்வாரிகள் மற்றும் பணியாக்கள் வசதியோடும் அதிகாரத்தோடும் வாழ்ந்து வருகிறார்கள். வடமாநிலங்களின் ஒட்டு மொத்த செல்வமும் அவர்கள் கையிலேயே உள்ளது. அதே சமயம் கல்விஅறிவு பெறாதவர்களும், வாடகை செலுத்துவதற்கு வருமானம் இல்லாமல் தெருவோரம் கொட்டகைகளில் குடியிருப்பவர்களும் எண்ணிக்கையில் மிக மிக அதிகம். வடமாநிலங்களில், தென்மாநிலங்களைப் போல நடுத்தட்டு மக்களை காண்பது மிகமிக அரிது. வடமாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்த காங்கிரஸ் அரசும் சரி, தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக அரசும் சரி இந்த மாதிரியான மக்களின் கல்விக்கோ குறைந்த பட்ச வருமானத்திற்கோ பொறுப்பேற்கவேயில்லை. இவர்களுக்கான வாழ்மானம் தென்மாநிலங்களின் கட்டுமான தொழில் அமைப்புகள், தென்மாநிலங்களில் ஏமாறும் மக்களை நம்பியே அமைகிறது. 14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியிலிருந்து சென்னை வந்த ஒரு வடமாநில குடும்பத்தினர், நகைக்கடைக்குச் சென்று கவரிங் கம்மல்களைக் கொடுத்து தங்க நகைகளை வாங்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு பிடித்துள்ளனர். காவல்துறை ஆய்வாளர் ராஜா ராபர்ட் தலைமையிலான காவல்துறையினர் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு படக்கருவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது டெல்லியைச் சேர்ந்த கிசன்லால் அகவை 69 என்பவர் காவல்துறையினரிடம் சிக்கினார். அவரிடம் விசாரித்தபோது டெல்லியிலிருந்து குடும்பத்தோடு வந்து, கவரிங் நகைகளை கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது. கிசன்லால் கொடுத்த தகவலின்படி அவரின் மகன் சஞ்செய் மற்றும் உறவினர்கள் சோனுகுமார், அவரின் மனைவி லதா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 10 இணை கம்மல் மற்றும் 7 கிராம் எடையுள்ள கவரிங் நகைகள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், கிசன்லால், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர். டெல்லியில் குடும்பத்தோடு குடியிருந்துவந்துள்ளார். தமிழகத்தில்தான் அதிகளவில் நகைகளை அணிவார்கள் என்பதை தெரிந்த கிசன்லால், குடும்பத்தினருடன் தொடர்வண்டியில் (தொடர்வண்டியில் வடமாநிலத்தவர்கள் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது வழக்கமானது) சென்னை வந்தார். கிசன்லால் மற்றும் அவரின் குடும்பத்தினர் புதுவண்ணாரப்பேட்டைக்கு வந்தனர். அங்குள்ள ஒரு வடஇந்தியர் நகைக்கடைக்குச் சென்றுள்ளனர். அவரிடம்தான் பழைய நகைக்குப் பதிலாக புதிய நகைகளை வாங்கி ஏமாற்றியுள்ளனர். இன்னும் சிலரை அவர்கள் ஏமாற்றத் திட்டமிட்டுள்ளனர். அதற்குள் நாங்கள் அவர்களைப் பிடித்துவிட்டோம் என்றனர். வடமாநில கொள்ளைக் கும்பலிடம் ஹிந்தியில் பேசி விசாரித்தபோது சென்னையில்தான் கவரிங் நகைகளை எளிதில் மாற்ற முடியும் என்றுதான் இங்கு வந்தோம். நாங்கள் நினைத்தப்படி நகைக்கடைகாரரும் ஏமாந்துவிட்டார். இதனால் கொண்டு வந்த கவரிங் கம்மல்களை ஏமாற்றிவிட்டு டெல்லிக்குச் செல்ல திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்குள் சிக்கிக் கொண்டோம் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து வடமாநில ஏமாற்றும் கும்பல் குடும்பத்தோடு சிறையில் அடைக்கப்பட்டனர். லதாவுக்கு கைக்குழந்தை உள்ளது. காவல் நிலையத்தில் அழைத்துவரப்பட்டபோது அந்தக்குழந்தை பசியால் கதறி அழுதது. உடனடியாக அந்தக் குழந்தைக்கு பால் வாங்கிக் கொடுக்க காவலர்கள் ஏற்பாடு செய்தனர். வடமாநிலத்திலிருந்து ஏமாற்றுவதற்காகவே சென்னைக்கு திட்டமிட்டு வந்த குடும்பத்தினர் சிக்கிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போல வடமாநில மக்களின் நிறைய வாழ்மான ஏமாற்றுக்கள் அன்றாடம் காவல்துறையில் பதிவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இது போன்ற மக்களுக்கு இராகுல் தேர்தல் அறிவிப்பில் தெரிவித்துள்ள குறைந்த பட்ச வருமானத் திட்டம் பெரும் வாய்ப்பாகும் என்றாலும் கூட இவர்களால் இராகுலுக்கு வாக்களிக்க முடியாது. ஏனென்றால் இவர்களுக்கு வாக்காளர் அட்டையெல்லாம் இருக்காது. வடமாநிலங்களில் வாக்குரிமை உள்ளவர்களின் வாக்குரிமையையும் அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அவர்கள் முதாலளிகள்தாம் தீர்மானிப்பார்கள். மற்றபடி மேற்சொன்ன, வடமாநிலங்களில் மிகக் குறைந்த அளவிலான பெரும் பணக்காரர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், சாமியார்கள், தாதாக்கள், ஒப்பந்தக்காரர்கள், நிலபிரபுக்கள், இந்தியா முழுவதும் வண்பொருள் மற்றும் நகை விற்பனை அடகு வணிகத்தில் ஈடுபட்டு வரும் மார்வாரிகள் மற்றும் பணியாக்கள் வசதியோடும் அதிகாரத்தோடும் வாழ்ந்து வருகின்றவர்கள் பாஜகவை விரும்புகிறார்கள் தென்மாநிலங்களில் ஏமாற்றுகளில் ஈடுபடும் வடமாநிலத்தவர்கள் மீது தென்மாநிலக் காவல்துறை கண்காணிப்பில் ஈடுபட்டு அவ்வப்போது இதுபோன்றவர்களை வடமாநிலங்களுக்கே திருப்;புவதுதாம் ஒரே தீர்வு. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,105.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.