படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு, அதனால் விசாலின் கை மற்றும் கால்களில் அடி பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கை காலில் கட்டுடன் விசால் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. 14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மூன்றாவது முறையாக விசால்-சுந்தர்.சி கூட்டணி இணைந்துள்ளது. விசால் பிலிம் பேக்டரி மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தைத் தயாரித்து வருகின்றன. மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களை இயக்கிய சுந்தர்.சி. தற்போது 3-வது முறையாக விசாலுடன் இணைந்துள்ளார். இதில், மத கஜ ராஜா இன்னும் வெளியாகவில்லை. மூன்றாவது முறையாக விசால்-சுந்தர்.சி கூட்டணி இணைந்துள்ள இந்தப் புதிய படத்தில் விசாலுக்கு கதைத்தலைவியாக தமன்னா நடிக்கிறார். இருவரும் ஏற்கெனவே கத்தி சண்டை படத்தில் தலைவன்-தலைவியாக நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு, அதனால் விசாலின் கை மற்றும் கால்களில் அடி பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கை காலில் கட்டுடன் விசால் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,105.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.