Show all

நீட் தோல்வி! ஆம்; நீட்டால் தோல்வி, நீட் தோல்விதான். டெல்லியில் 8-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நன்றாகப் படிக்கிறான், நன்றாகப் படிக்கிறான் என்று தொடர்ந்து 12 ஆண்டுகளாகப் பாராட்டு பெறும் போது, நாம் ஏன் மருத்துவராகக் கூடாது என்கிற கேள்வி அந்த மாணவனுக்குள் எழுந்திடவே செய்யும்; அதுவும் அவன் பதினொன்றாம் வகுப்பில் உயிரிஇயல் பாடப் பிரிவை எடுத்திருக்கும் போது. அப்படிப் பட்ட மாணவனை மருத்துவனாக்குவது அரசின் கடமை. 

திடீரென்று நல்ல மதிப்பெண் பெற்றவன் பெறாதவன் என்று எந்தக்  கணக்கும் இல்லாமல், கார்ப்பரேட் பயிற்சி நிறுவனங்களுக்கு தொழில் வாய்ப்பு தரும் நோக்கில், நடுவண் அரசு நீட் என்கிற ஒரு குலுக்கல் முறையில் மருத்துவத்திற்கான மாணவர் தேர்ந்தெடுப்பு முறையை அமுல் படுத்துவதால், மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை தகர்த்து வருகிறது நீட் தேர்வு. 

தமிழகத்தில் கடந்த ஆண்டு அனிதா, நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். அந்தவரிசையில் விழுப்புரம் மாணவி பிரதீபா தற்கொலை செய்து மரணித்துள்ளார். இந்த நிலையில் டெல்லியில் பிரணவர் மகேந்திரதா என்ற மாணவர் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் வெற்றி பெற முடியாத விரக்தியில் பிரணவ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக காவல் துறை விசாரணை நடந்து வருகிறதாம். இதெல்லாம் ஒரு அறங்கூற்றுவர்கள் குழுவே விசாரித்து, நீட் தேர்வை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய விசாரணை காவல்துறை விசாரணை போதுமானதன்று.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,809. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.