Show all

முடியாது இதுவென்று, பார்வையாளர்களை விஜய் தொலைக்காட்சிக்கு மாறவைத்த வாணி ராணி முடிகிறதாம்

22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தொடர் உலகில் அசைக்க முடியாத ராணியாக இருந்து வந்தவர் ராதிகா சரத்குமார். 'சித்தி' தொடங்கி, அவர் இதுவரை நடித்த, தயாரித்த எல்லா தொடர்களுமே பெண்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவைதாம். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனநிலையை அறிந்தவர் போல் கணித்து, அதற்கு ஏற்றார்போல் தொடர்களைத் தந்தவர்.

தற்போது அவர் 'வாணி ராணி' என்ற தொடரை குடும்பக் கதை என்று சொல்லி கதையை வெளியிலேயே அலைய விட்டுக் கொண்டிருக்கிறார். கதையை இழுஇழுவென்று இழுத்து பார்வையாளர்கள் சலிப்பை சம்பாதித்து, சன்தொலைக் காட்சியை விட்டு விஜய் தொலைக்காட்சிக்கு தாவும் படி செய்து விட்டார். பிரியமானவளே தொடர், அதை விடக் கொடுமை. இப்போது சன்தொலைக் காட்சி பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: இந்த தொடர் முடிந்து

'சந்திரகுமாரி' என்ற அடுத்த தொடர் வெளியாக உள்ளது. வரலாற்றுப் பின்னணியைக் கொண்டு இந்த தொடர் தயாராக இருக்கிறது. ரஜினியின்  'பாட்ஷா' படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, இந்தத் தொடரை இயக்குகிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,809.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.