Show all

மீண்டும் செயல்பட வேண்டும்! ஆதார் சேவைகளுக்கான நடுவண் அரசின் 1200 பொது சேவை மையங்கள்

15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆதார் அட்டையைத் தலையாயத்துவமான ஆவணமாக மாற்றிவிட்டது மோடி அரசு. அரசு சேவைகள், வங்கி பணிகள் உள்பட எல்லா விசயங்களுக்கும் ஆதார் அட்டை தேவையென நிர்பந்திக்கப் படுகிறது. புதிதாக ஆதார் அட்டை வாங்குவதற்கும், ஆதார் அட்டைகளில் திருத்தங்கள் செய்வதற்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

தொடக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் நடுவண் அரசு சார்பில் 1200 பொதுசேவை மையங்கள் செயல்பட்டன. அப்போதுமே மக்கள் சிரமப் பட்டு வந்தனர். இப்போது அதையும் மூடிவிட்டனர். தமிழக அரசின் இ.சேவை மையங்களை மட்டுமே நாடும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்கள் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படுகிறது.

பிறப்பு, இறப்பு சான்றிதழ் முதல் 50-க்கும் மேற்பட்ட பணிகள் இந்த சேவை மையங்கள் மூலம் செய்யப்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு மையத்திலும் ஒரே ஒரு ஊழியர் இருக்கிறார். தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் ஆதார் சேவை பெற செல்கிறார்கள். ஆனால் 10 அல்லது 15 பேருக்கு மட்டுமே அனுமதிப்பு அட்டை வழங்கப்படுகிறது.

சில தனியார் நிறுவனங்கள் ஆதார் திருத்தம் அனுமதி பெற்றுள்ளன. அங்கு ரூ.500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனாலும் சேவைகளில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன.

ஆதார் அட்டையில் என்ன திருத்தம் செய்ய வேண்டுமென்றாலும் அதற்கான ஆவணத்தையும் படமெடுத்து இணைக்க வேண்டும். அதோடு வாடிக்கையாளரின் கையெழுத்தும் இணைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் பரிசீலித்து நிராகரித்து விடுகிறார்கள். பின்னர் மீண்டும் அலைய வேண்டும்.

ஆதார் சேவைகளுக்காக நடுவண் அரசின் பொது சேவை மையங்கள், பொது மக்களின் சிரமம் தவிர்க்க மீண்டும் செயல்பட வேண்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,833.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.