Show all

மோடி வாக்குறுதி கனவாகிப் போனது! சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் வைப்பு இரட்டிப்பு ஆனது

15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கணக்கில் காட்டப்படாத கறுப்பு பணத்தை, ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், இந்தியர்கள் வைப்பு செய்யப் படுவதாக சொல்லப் படுவது மிகமிக பழைய பழைய செய்;தி. இந்தியா மட்டுமின்றி, பல நாடுகளை சேர்ந்த பணக்காரர்களும், சுவிஸ் வங்கிகளில் வைப்பு செய்கின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்தப் பணத்திற்கு அந்த வங்கிகள் வட்டியெல்லாம் தராது; பணத்தைப் போட்டவர்கள் தாம் அந்தப் பணத்தை பாதுகாப்பதற்கான கட்டணம் செலுத்த வேண்டும்.

கறுப்பு பணம் பதுக்கலை தடுக்கவும் போட்ட பணத்தை எடுத்து இந்தியர்கள் ஒவ்வொருவர்களின் இந்திய வங்கிக் கணக்கிலும் பதினைந்து இலட்சம் வரவு வைக்கப் போவதான மோடி ஐயாவின் வாக்குறுதிகள் எல்லாம் கனவுச் செய்தியாகிப் போனது!

இந்திய ஏழையின் வங்கிக் கணக்கிற்கு மோடி ஒரு காசு கூட வரவு வைக்காமல் போனாலும், அமித்ஷா மகன், பாபா ராம்தேவ் அம்பானி வாரிசுகள் வங்கிக் கணக்குகளுக்கு பணம் எகிறத்தான் செய்திருக்கிறது. 

நடுவண் அரசுக்கு இந்தியர்களின் விபரங்களை அளிக்க, சுவிட்சர்லாந்து அரசு சம்மதித்து, தங்கள் நாட்டு வங்கிகளில் வைப்பு செய்துள்ள, இந்தியர்களின் பண விபரங்கள் பற்றிய அறிக்கையை, சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கை தகவல் படி, கடந்த, 2016ல், மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் செய்திருந்த வைப்புத் தொகை ரூ4,500 கோடி ரூபாயாக இருந்தது. 2017ல், இந்தியர்களின் வைப்புத் தொகை 50 விழு;க்காடு அதிகரித்து, 7,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.

சுவிஸ் வங்கிகளில், வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் செய்த, மொத்த வைப்பு 100 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. சுவிஸ் வங்கிகளில் நேரடியாக, 6,891 கோடி ரூபாயும், நிதி நிறுவனங்கள் மூலம், 111.2 கோடி ரூபாயும், இந்தியர்கள் வைப்பு செய்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாஜக வரும் நாடளுமன்றத்  தேர்தலில் பல புதிய வாக்குறுதிகளை கொடுக்கும் போது நம்பாமல், இந்திய மக்கள் விழித்துக் கொண்டால் சரி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,833.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.