கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மக்களுக்கு
வழங்கப் பட்டுவரும் மானியங்களைப் பிடுங்குவதில் மோடிக்கு இணையாக இது வரை ஆட்சியில்
இருந்த எந்த நடுவண் அரசும் ஈடு இணையாக முடியாது.எந்த ஏழையும் தங்கள் எரிவாயு மானியத்தை
விட்டு கொடுக்க மோடி அரசு மேற்கொள்ளும் வியாபாரத் தந்திரத்தைப் பாருங்கள்! நமது
செல்பேசியில் எரிவாயு செயலியைத் தரவிறக்கம் செய்து, கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக எந்த ஏழையும்
தங்கள் எரிவாயு மானியத்தை விட்டு கொடுக்க மோடி அரசு மேற்கொள்ளும் வியாபாரத் தந்திரத்தில்
விழுந்து ஒவ்வொரு நாளும் ஏமாறும் பலரும் எரிவாயு விற்பனை அலுவலகத்தில் காத்துக் கிடக்கிறார்கள். நமது
செல்பேசியில் எரிவாயு செயலியைத் தரவிறக்கம் செய்து கொண்டு உள்ளே நுழைந்தால், நாம் நமது மானியத்தை இழப்பதற்கு கிவ்அப் சப்சைடி(மானியம்)
என்று ஆங்கிலத்திலும், மானியத்திற்கு விண்ணப்பிப்பதற்கு பாகல் என்று ஹிந்தியிலும்
தலைப்பிட்டிருக்கிறார்கள். நிறைய
பேர் மானியம் வேண்டும் என்பதற்கு கிவ்அப் சப்சைடி(மானியம்) என்ற ஆங்கிலத் தலைப்பைத்
தொட்டு விட்டு மானியம் இழந்தவர்களாக பலரும் எரிவாயு விற்பனை அலுவலகத்தில் காத்துக்
கிடக்கிறார்கள். அதே
போன்று நாம் எரிவாயுவுக்காக செல்பேசியில் ஒலிஆணைகள் மூலம் இயங்கி பதிவு செய்யும் போதும்
மானியத்தை விட்டுக் கொடுப்பதற்கு சுழியை அமுக்குங்கள் என்று முதலிலும் எரிவாயுவுக்காக
பதிவு செய்ய ஒன்றை அமுக்குங்கள் இரண்டாவதாகவும் ஒலிஆணை வரும். தவறி நாம் சுழியை அமுக்கி
விட்டால் அவ்வளவுதான்! எரிவாயு விற்பனை அலுவலகத்தில் காத்துக் கிடப்போர் பட்டியலில
இணைந்து கொள்ள வேண்டியது தான். தம்மை
ஆட்சியாளத் தேர்ந்தெடுத்த தமது மக்களிடமே வியாபார யுக்தியைக் கையாளும் மோடி- மஸ்தான்
மோடிதான். மோடி மஸ்தான் என்றால் தெருவில் ஒரு கூட்டத்தை கூட்டி வைத்து கொண்டு அந்த கூட்டத்தின் நடு நடுவே மோடி மஸ்தான் சார்ந்த நபர்கள் இருந்து கொண்டு அவரின் புகழ் பாடி கொண்டிருப்பார்கள் . எல்லாவிதமான பிரச்சனைக்கும் தன்னிடம் தீர்வு இருக்கிறது என்று சொல்லி கொண்டு கூடி இருக்கின்ற கூட்டத்தை தன்வய படுத்தி தன்னை ஒரு சக்தி வாய்த்த நபராக காட்டி கொள்ளுபவன்.உண்மையில் அப்படிஒரு சக்தி அவனுக்கு கிடையாது.அது உண்மை அல்ல என்று தெரித்தவர்கள் கூட அந்த மோடி மஸ்தான் செய்யும் நபரை நெருக்குவதில்லை காரணம்.அவன் கூறும் அச்சமூட்டும் வார்த்தைகளினால் ஏற்படும் சிறு பயம்!.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



