Show all

பிரதமர் நரேந்திர மோடி இனவாதத்தைத் துருப்புச் சீட்டாக பயன்படுத்துகிறார்:லாலு பிரசாத் யாதவ்

பிரதமர் நரேந்திர மோடி இனவாதத்தைத் துருப்புச் சீட்டாக பயன்படுத்துகிறார் என்று ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

மேலும் அவர் கூறும் போது நாட்டு மக்கள் ஒருபோதும் பிரதமர் என்ன சொல்லுவார் என்றே எதிர்பார்த்து காத்திருப்பதில்லை. கடந்த திங்கள் அன்று மோடி தேர்தல் பிரசாரத்தின் போது இது பா.ஜ.க கூட்டணி அல்ல தேசிய ஜனநாயக கூட்டணி, ஆனால் லாலு-நிதிஷ் காங்கிரஸ் கூட்டணி,

பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால்,

இட ஒதுக்கீடு தொடருமா என்று அச்சுறுத்த அவர்கள் யார் என்று பேசியதை லாலு குறிப்பிட்டு காட்டியுள்ளார்.

மேலும் மோடி பேசும் போது   எஸ்.சி., எஸ்.டி,க்கான இட ஒதுக்கீடை இஸ்லாமியர்களின் ஓட்டுக்காக ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், பறிக்க நினைப்பதாக கூறினார். நான் கூறுகிறேன் எப்போது ஜாதி அரசியலை மோடி பேசினாரோ அப்போதே பா.ஜ.கவுக்கு தோல்வி தொடங்கி விட்டது. இந்த நாட்டில் யாரும் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடை பறிக்க முடியாது. தேர்தல் முடிவை கண்டு பா.ஜ.க தலைவர்களுக்கு பயம் வந்து விட்டது.

ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி பிகார் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று அடுத்து ஆட்சி அமைக்கும். மூன்றாம் கட்ட தேர்தலில் 50 இடங்களில் எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்ற கேள்விக்கு இடம் இல்லை.

5 கட்ட தேர்தலிலும் மொத்தம் 243 தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றி பெறும் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று லாலு வாக்களித்த பின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் போது இவ்வாறு தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.