Show all

தோனியால் இந்திய அணியிலிருந்து நீக்கப்படவில்லை: சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். தனது 37-ஆவது பிறந்த தினமான கடந்த 20-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தோனியால் அணியிலிருந்து நீக்கப்பட்டீர்களா என்கிற கேள்விக்கு சேவாக் அளித்த பதில்:

எனக்கும் தோனிக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது. இருவரும் ஒரே ஹோட்டலில்தான் தங்குவோம். தோனியின் தலைமையில் நான் ஆடி இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது. தோனியுடன் எனக்குப் பிரச்னை ஏற்பட்டிருந்தால் நான் அணியிலிருந்து முன்பே நீக்கப்பட்டிருப்பேன். தோனியால் நான் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்க மாட்டேன். என்று கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.