மூன்று புதிய சமஸ்கிருத நடுவண் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான சட்ட முன்வரைவின் மீது, நேற்று மாநிலங்களவையில் வைகோ முழங்கிய உரை. 04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மூன்று புதிய சமஸ்கிருத நடுவண் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான சட்ட முன்வரைவின் மீது, நேற்று மாநிலங்களவையில் வைகோ முழங்கிய உரை. சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கான சட்டமுன்வரைவை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். கடந்த ஆண்டு உஜ்ஜைன் நகரில் நடந்த ஆர்எஸ்எஸ் மாநாட்டில், ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா முழுமையும், அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும், குருகுலக் கல்வியைப் பரப்ப வேண்டும் என்பதே, அந்தத் தீர்மானத்தின் கருத்து. அந்த நோக்கத்திற்காக இந்தியாவின் அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் இந்த அரசு ஒதுக்கி இருக்கின்ற ஒட்டுமொத்தத் தொகையை விட 22 மடங்கு கூடுதல் பணத்தை, சமஸ்கிருதம் என்ற ஒரே மொழியின் வளர்ச்சிக்காக ஒதுக்கி இருக்கின்றார்கள். இந்த அவையில் இருக்கின்ற, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, ஒடியா, பஞ்சாபி மற்றும் ஏனைய மொழிகளைப் பேசுவோர், இதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், இந்தப் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டால், எதிர்காலத்தில் சமஸ்கிருதமும், ஹிந்தியும், தென்னிந்திய மொழிகளை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் ஏனைய மொழிகள் அனைத்தையும் அழித்துவிடும். எனக்கு சமஸ்கிருத மொழியை எழுத, பேச, படிக்கத் தெரியும் என ஒரு சான்றிதழை, ஒரு மாணவன் கொடுத்தால் போதும்; அந்த மாணவன் பத்து அல்லது 12 ஆம் வகுப்பில் நேரடியாகச் சேர்த்துக்கொள்ளப்படுவார். அவர்கள், இயற்பியல், வேதியியல், வரலாறு, புவியியல் என வேறு எந்தப் பாடத்தையும் படிக்க வேண்டியது இல்லை. சமஸ்கிருத மொழியை வளர்ப்பதற்காக, 643.24 கோடி செலவில் தேசிய சமஸ்கிருதக் கல்லூரியைத் தொடங்கினார்கள். ஆனால், எங்கள் செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்திற்குக் கடந்த ஆண்டு வழங்கியது வெறும் 4 கோடி 65 லட்சம்தான். கடந்த மூன்று ஆண்டுகளில் வழங்கிய ஒட்டுமொத்தத் தொகை வெறும் 21 கோடிதான். நான் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவன். உங்களுடைய குரு மனு, சாதிகளை அறிமுகப்படுத்தி, மனிதர்களுக்கு இடையே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பிரிவினையை ஏற்படுத்தியவர். எங்களுடைய ஆசான் திருவள்ளுவர். ஈடு இணையற்ற ஒரு பொதுமறையை இந்த உலகத்திற்குத் தந்தவர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னவர். உலகின் தொன்மையான மொழி தமிழ்தான். அதுவே, அனைத்து மொழிகளுக்கும் தாய். இந்தச் சட்ட முன்வரைவு, இந்த அவையால் ஏற்கப்பட்டு சட்டம் ஆனால், அது இந்திய ஒற்றுமையை உடைத்துத் துண்டுதுண்டாக்கி விடும்; மக்களாட்சிக் கோட்பாட்டை ஆழக்குழி தோண்டிப் புதைத்துவிடும் என எச்சரிக்கின்றேன். எனவே, ஒட்டுமொத்தமாக இந்த சட்டமுன்வரைவை எதிர்க்கின்றேன். அனைத்து மாநில அரசுகளும், இந்தச் சட்டத்தை எதிர்த்து, சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு வைகோ பேசினார். சமஸ்கிருதம் எந்த இனத்தின் மொழி? “எந்த ஒரு மொழியும் தோன்ற ஒரு இனம் கட்டாயம். ஓவ்வொரு மொழிக்கும் இனம் உண்டு. தமிழ் இனம், ஆங்கிலேய இனம், ஜப்பானிய இனம் எல்லாம் உண்டு. ஆனால், சமஸ்கிருதர் என்ற (நேட்டிவ் ஸ்பீக்கர்லஸ்) இனம் வரலாற்றில் எந்தக் காலக்கட்டத்திலும் இருந்ததில்லை என்பதை அவர்கள் சுட்டி காட்டியிருக்கிறார்கள். இன்றும் சம்ஸ்கிருத ஆதரவாளர்கள் கூட அவர்கள் வீட்டிலே சமஸ்கிருதம் பேசுவதில்லை. மாறாக, மாநில மொழியையே பேசுகிறார்கள். சமஸ்கிருதம் எந்தக்கால கட்டத்திலும் பேசப்பட்டதாக சான்று ஒன்றுமில்லை என்பதால் அதை ‘மொழி’ என்று வகைப்படுத்த முடியாது என்பது அவர்கள் வாதம். அது எப்போதாவது பேசப்பட்டிருந்தால் ‘அழிவின் விளிம்பில் இருக்கும் மொழிகளில் வந்து அப்புறம் தான் அழிந்த மொழியாக மாறமுடியும் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இதுவரை சமஸ்கிருதம் அழிவின் விளிம்பு மொழிகள் பட்டியலில் தோன்றியதில்லை என்பது உண்மை. மூன்றாவதாக, பேசப்படாத ஒரு குறியீட்டிலிருந்து, பேசப்படும் பெருமொழிகள் தோன்றமுடியாது என்பதையும் அந்த அறிஞர்கள் ஆணித்தரமாக சொல்கிறார்கள். எடுத்துக்காட்டாக, பேசப்படாத ‘ஜாவா’ குறியீட்டிலிருந்து மொழிகள் தோன்ற முடியாது என்பது அவர்கள் வாதம் . ஆக, அவர்கள் சமஸ்கிருதம் என்பது அடிப்படையில் மொழியின் குணங்களைக் கொண்டது இல்லை என்றும், அது ஒரு குறியீட்டு 1அமைப்பு என்றும், வழிபாடு செய்யவும், நூல் எழுதவும் மட்டுமே பயன் பட்டது என்றும் முடிவு செய்துள்ளார்கள். இந்தோ -யூரோப்பியன் மொழிகள் மொத்தம் 449 இல் சமஸ்கிருதம் தவிர மிச்சம் 448 மொழிகளுக்கும் பேசும் குடிகள் உள்ளனர் அல்லது இருந்தனர் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். எனினும் சமஸ்கிருதம் இன்னும் இந்தோ -யூரோப்பியன் மொழிகள் பட்டியலில் தான் தற்போது இருக்கிறது. அடுத்த மொழியியல் சர்வதேச மாநாட்டில் இதைக் குறித்த முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமஸ்கிருத மொழி பேசுவோர் எண்ணிக்கை, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, வெறுமனே 24,821 மட்டுமே என்று தெரியவருகிறது. சமஸ்கிருத மொழி எப்போதும் யாருக்கும் தாய்மொழியாக இருந்தது இல்லை. அப்படி ஒரு சாராருக்கு தாய்மொழியாக சமஸ்கிருதம் இருந்திருக்குமேயானால், அந்த இனத்தில் தோன்றும் குழந்தைகள் வெறுமனே ஐந்து அகவைக்குள் கற்றுத் தேர்ந்து சமஸ்கிருத மொழியை இந்தியாவில் அதிக மக்கள் பேசும்மொழியாக நிலை நிறுத்தியிருந்திருப்பார்கள். உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் கலவை மொழியான ஹிந்தி தோன்றியிருக்கவே வாய்ப்பு இல்லாமல் போயிருந்திருக்கும். ஆரியர்களின் நான்கு வேதங்கள், இராமாயணம், மகாபாரதம் இம்மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. இந்தியாவின் அலுவல் மொழிகள் 22ல் இதுவும் ஒன்றாகும். ஹிந்தி, வங்காளி, குஜராத்தி, மராத்தி, காசுமீரி, அரியான்வி, நேபாளி, ஒரியா, கொங்கணி, மைத்திலி, சிந்தி, பஞ்சாபி முதலிய வட இந்திய மொழிகள் பலவற்றுள்ளும் கொஞ்சமாக சமஸ்கிருத மொழிச்சொற்கள் காணப்படுகின்றன. தென் இந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவற்றிலும் வடச்சொல் இருப்பதைக் காணலாம். எனினும் பெரும்பாலான சமஸ்கிருத சொற்கள் சிற்சில விதிகளை அமைத்து ஏராளமான சொற்களை தமிழ் மொழியில் இருந்து எடுக்கப் பட்டவையாக அறிஞர்கள் கூறுவர். நாடோடிகளாக பயணித்த பார்ப்பனியர்களுக்கு சொந்தமாக ஒரு மொழி எக்காலத்தும் இருந்ததில்லை. அவர்கள் எந்த மண்ணின் மக்களோடு வாழ்கிறார்களோ அந்த மண்ணின் மொழியே பார்ப்பனர்களக்கான மொழியாகும். அவர்கள் தம் இனத்தாரோடு மட்டும் தொடர்பு கொள்ள கண்டுபிடித்த செயற்கை மொழிதான் சமஸ்கிருதம். அவர்கள் சமஸ்கிருதத்ததை இடுகுறியாக உருவாக்கிக் கொள்ளவில்லை. தமிழின் ஒவ்வொரு சொல்லையும் சமஸ்கிருதமாக்க பல விதிமுறைகளை உருவாக்கி தமிழிலிருந்து சமஸ்கிருத மொழியைக் கட்டமைத்தார்கள். அவர்களோடு தொடர்பில் இருந்த தமிழ்அறிஞர்கள் பலரும் சமஸ்கிருதமொழி கட்டமைப்பில் உதவியதாலேயே, தமிழர்களுக்கு அப்போது சமஸ்கிருதத்தின் மீது வெறுப்பு வரவில்லை. ஆனால் பார்ப்பனியர்களுக்கு தமிழர்கள் மீது எந்த காலத்தும் நட்பு இருந்தது இல்லை. காரணம் பார்ப்பனியர்களின் சமஸ்கிருத மொழி, வானியல், மருத்துவம், இசை, ஆடற்கலை, இறையியல் நெறிகள் என பல தமிழரின் உடமைகள் என்பதால், தங்கள் களவாணித்தனத்தை மறைக்க, தமிழர்களிடம் இருந்து தங்களை உயர்வாகக் காட்டிக் கொள்வதிலேயே குறியாக இருந்தார்கள். இன்றும் இருந்து வருகிறார்கள். இப்படியான சமஸ்கிருத மொழியைத் தூக்கிப்பிடிக்க, சமஸ்கிருத மொழிக்கு மூன்று பல்கலைக் கழகங்கள் என்ற பெயரில் குருகுலக் கல்வியை முன்னெடுக்க, பாஜகவினர் இருபத்தியிரண்டு மொழியினருக்கு சொந்தமான இந்திய வரிப்பணத்தில் ஒரு சட்டமுன்வரைவை நாடாளுமன்றத்திலும், மாநிலங்களவையிலும் பதிகை செய்து, சட்டமியற்ற முனைந்து கொண்டிருக்கின்றார்கள். அதற்கு எதிராகத்தான் மாநிலங்களவையில் வைகோ கடுமையான தனது சாடலை முழங்கி இருக்கின்றார்கள்.
சமஸ்கிருதம் என்பது அடிப்படையில் மொழி தானா என்ற ஐயம் அண்மையில் சில இந்தோ -யூரோப்பிய அறிஞர்களுக்கு வந்து, அவர்களின் ஆராய்ச்சியில் கண்டுபிடித்ததை கீழே காணலாம் .
இரண்டாவதாக மொழி என்றால் கட்டாயம் தற்போது பேசப்பட அல்லது எப்போதாவது பேசப்பட்டிருக்க வேண்டும். பேசப்படாதது எதுவும் தமிழ் இலக்கணத்தில், குழூக்குறி என்கிற தந்திக்கு பயன்பட்ட கட்கட மொழி, கனிணிக்குப் பயன்படுகிற ஜாவா மொழி, வணிகத்தில் கடைக்காரர்கள் வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ள முடியாமல் பயன்படுத்தும் சில அடையாளச் சொற்கள் மொழி என்கிற் குறியீடு என்றாகும் என்கிறார்கள் அவர்கள்.
அவர்கள் மொழி, இலக்கியம் என்று கிளம்பியதெல்லாம் இந்தியாவிற்கு வந்து வடபுலத்தமிழர்களோடு தொடர்பு கொண்ட போதுதான். அவர்கள் நாடோடி வாழ்க்கையை முடித்துக் கொண்டு வேதகால நாகரிகத்தை முன்னெடுத்ததும் இந்தியாவிற்கு வந்து வடபுலத்தமிழர்களோடு தொடர்பு கொண்ட போதுதான்.
எடுத்துக்காட்டாக கீழ்கண்ட எல்லா வடமொழிச் சொற்களுக்கும் பிர என்ற முன்னொட்டு விதி முன்னெடுக்கப்பட்டு தமிழ்ச்சொற்கள் வடமொழி ஆக்கப்பட்டு இருக்கிறது. பிரவாளம், பிரமாண்டம், பிரபலம், பிரம்மா, பிரவாகம், பிரசாதம், பிரபஞ்சம், பிரவேசம், பிரமிப்பு, பிரபு, பிரகாரம், பிரணவம், என்று நிறைய சொற்கள் வடமொழியில் இருக்கின்றன. இப்படி தமிழில் இருந்து எடுக்கப்பட்ட ஒவ்வொரு தொகுப்பு சொற்களுக்கும் ஒரு விதி முன்னெடுக்கப் பட்டிருக்கும். நடப்பில் தமிழறிஞர்கள், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் போன்ற தமிழ்ப் பேரமைப்புகளின் உதவியோடு சமஸ்கிருதத்தை ஆய்வுக்கு உட்படுத்தினால் அறுபது விழுக்காட்டிற்கு மேலான சொற்களை தமிழ் என்று நிறுவ முடியும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



