Show all

முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி செல்பேசியின் விலை ரூ 315 கோடியாம்

நீட்டா அம்பானி பயன்படுத்தக் கூடிய செல்பேசியில் உள்ள சிறப்பு அமைப்புகளை மையப்படுத்தி இத்தகைய செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

அம்பானியின் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானோர் பிளாக் பெர்ரி செல்பேசி பயன்படுத்தி வரும் நிலையில், நீட்டா அம்பானி, ‘பால்கன் சூப்பர் நோவா ஐபேசி 6 பின்க் வைரம்பயன்படுத்தி வருகிறார். இதன் மதிப்பு ரூ.315 கோடி.

2014ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செல்பேசி, சிறப்பு வாடிக்கையாளர்களுக்கானது. சிறப்பு பதிவின் பேரில் இந்த செல்பேசிகள் தயாரிக்கப்பட்டு வழங்க படுகின்றன.

இத்தகைய பெரிய தொகையில், அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட தனிப்பட்டவர்களுக்கான ஜெட் விமானம் வாங்கிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பேசியின் வெளிப்புறம் 24 கேரட் தங்கம் மற்றும் கொண்டு செய்யப்பட்டுள்ளது.

உடைக்க முடியாத வகையில் பிளாட்டினம் பூச்சு செய்யப்பட்டுள்ளது.

ஒரு பெரிய பின்க் வைரம் இந்த பேசியின் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

ஊடுருவல் செய்ய முடியாதபடி முழுமையாக பாதுகாக்கப்பட்ட அமைப்பைக் கொண்டது. யாரேனும் ஊடுருவல் செய்ய முயன்றால் உடனடியாக செல்பேசியின் உரிமையாளருக்கு தகவல் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.