சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் ரவீந்தர ஜடேஜா மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் ஆக்கியோர் முறையே முதல் இரண்டு இடங்களை கைப்பற்றினர். இந்திய வீரர் ரவீந்தர ஜடேஜா 897 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ரவிசந்திரன் அஸ்வின் 849 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். அதேபோல் டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் பட்டியலில் புஜாரா 866 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் விராட் கோலி 826 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசைப்பட்டியலில் விராட் கோலி 873 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை பந்து வீச்சாளர்கள் பட்டியலில் எந்த ஒரு இந்திய வீரரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



