கேரளா, தமிழகத்தில் போட்டியிட மோடிக்கு தைரியம் உள்ளதா? என காங்கிரஸ் எதிர்க் கேள்வி எழுப்பியுள்ளது. ராகுல் காந்தி பாதுகாப்பான தொகுதியை நோக்கி ஓடுகிறார் என்னும் பாஜக கருத்தை விமர்சனம் செய்துள்ள காங்கிரஸ் தலைவர் சசி தரூர் மூலமாக. 24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில், ராகுல் காந்தி அமேதி தொகுதியுடன், வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் பாஜக சார்பில் மீண்டும் ஸ்மிருதி இரானி களமிறங்கியுள்ளார். தோல்வி காரணமாகவே அமேதியை விட்டு ராகுல் காந்தி வெளியேறியுள்ளதாக பாஜகவினர் தெனவெட்டு காட்டி வருகின்றனர் இந்நிலையில் கேரளா, தமிழகத்தில் போட்டியிட மோடிக்கு துணிவு உள்ளதா? என காங்கிரஸ் கேள்வியை எழுப்பியுள்ளது. வயநாடு தொகுதியில் போட்டி தொடர்பாக ராகுல் காந்தி எடுத்த முடிவு அவரால் வட இந்தியாவிலும், தென்னிந்தியாவில் வெற்றிப்பெற முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ஏன காங்கிரசார் தெரிவிக்கின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,115.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.