Show all

மோடி! நீங்கள் ஊமக்கோட்டானாய் இருப்பது ஏன்? கொஞ்சம் பேசுங்கள். 600க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் தூது

09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி, பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பார்த்து அமைதியா இருப்பதை கண்டித்து, அவருக்கு 637 உலக புகழ்பெற்ற கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் தூது  அனுப்பி இருக்கிறார்கள். கொஞ்சம் பேசுங்கள் என்று, கோபமாக அந்த தூதுமடலில் அவர்கள் எழுதி இருக்கிறார்கள். 

இந்தியாவில் தற்போது அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகள் அதிகரித்து வருகின்றன. பெண்கள் மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். 

அதேபோல் சிறுபான்மையின மக்களும் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதிலெல்லாம் பாஜக கட்சியினரும் பெரு வகையில் தொடர்பில் இருக்கிறார்கள். இதற்கு எதிராக மோடி ஒற்றைச் சொல் கூட பேசவில்லை என்று எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து இந்தியாவில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக தலைமை அமைச்சர் மோடி எதுவுமே பேசாமல் இருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியின் போது, டெல்லியில் நடந்த ஒரு பாலியல் குற்றத்தை அரசு கவிழ்ப்பு முயற்சிக்கு பயன் படுத்திக் கொண்ட மோடி, அவர் ஆட்சியில் அன்றாடம் நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து பேசாமல் இருக்கிறார். தலையாயத்துவமாக பாஜக கட்சியினர் செய்யும் குற்றங்கள் பற்றி வாய் திறப்பதில்லை. 

மோடியின் இந்த நிலைபாட்டை கண்டித்து அவருக்கு மாணவர்கள் தூது அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் அனுப்பியது இந்திய மாணவர்கள் மட்டும் இல்லை 

மொத்தம் 637 கல்லூரிகளில் இருந்து மோடிக்கு இப்படி தூது அனுப்பப்பட்டு உள்ளது. இதில் 200 க்கும் அதிகமான தூதுகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டனில் படிக்கும் இந்திய மாணவர்களுடையது. 5000க்கும் அதிகமான மாணவர்கள் இதில் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். தூதில் என்ன இருக்கிறது: 

நீங்கள் பெண்களுக்கு எதிராக நடக்கும் எந்த பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பதில்லை. முதன்மையாக உங்கள் கட்சியினர் செய்யும் குற்றம் பற்றி எதுவும் பேசுவதில்லை. நீங்கள் கடைசியாக காஷ்மீர் சம்பவத்தை கண்டித்தது கூட மயில் இறகால் நீவிவிட்டது போல மென்மையாக இருந்தது. 

நீங்கள் இப்படி அமைதியாக செயலற்று இருப்பது நம்முடைய மக்களாட்சிமாண்புக்கு மிகப்பெரிய பிரச்சனையை உண்டாக்கும் 

என்று கூறியுள்ளார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு மோடிக்கு இதேபோல் முன்னாள் இராணுவ வீரர்கள், காவலர்கள், அரசு அதிகாரிகள் சிலர் தூது அனுப்பி இருந்தனர். அதில், சில முதன்மையான வழக்குகளில், விசாரணை அதிகாரிக்கு சரியான 'கடமையாற்றும் உரிமை' கொடுக்கப்படுவதில்லை, பாலியல் குற்றவாளிகள் எளிதாக தப்பித்து விடுகிறார்கள் என்று குற்றச்சாட்டு வைத்து இருந்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,765.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.