Show all

டொனால்ட் டிரம்ப்பிடம் இருந்து மோடி அரசியல் நாகரிகம் கற்றுக் கொள்ள வேண்டும்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று மோடிக்கு முன்னாள் நடுவண் அமைச்சர் பா.சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார்.

     நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரை விமர்சித்தார். இருப்பினும் பிரதமர் மன்மோகன் சிங் மீது எந்தவித குற்றச்சாட்டுக்களும் இல்லை. இதுபற்றி பேசிய பிரதமர் மோடி, ரெயின்கோட் அணிந்து குளிக்கும் கலை கற்றவர் மன்மோகன் சிங் என்று குறிப்பிட்டார்.

     இதைக் கண்டித்து பேசிய முன்னாள் அமைச்சர் பா.சிதம்பரம், பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை நினைவுகூற வேண்டும் என்று கூறினார். டிரம்ப் மீது பல்வேறு கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் அவர் தனது முதல் உரையில், முன்னாள் அதிபர் ஒபாமாவை பாராட்டினார். தன் வழியை அவர் விரும்புவார் என்று நம்பிகை தெரிவித்தார். அவரிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பா.சிதம்பரம் மோடிக்கு அறிவுறுத்தினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.