Show all

பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் மாணிக் சர்க்காருக்கு கொலை மிரட்டல்

பாஜக விற்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்காருக்கு மர்ம நபர் ஒருவர் முகநூலில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்காரை கொலை செய்பவர்களுக்கு பரிசு வழங்குவதாக அறிவித்த அந்த மர்ம ஆசாமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திரிபுரா மாநில முதல்வராக இருப்பவர் மாணிக் சர்க்கார். இவருக்கு நேற்று காலை முகநூலில் கொலை மிரட்டல் ஒன்று வந்துள்ளதை அடுத்து அகர்தலா காவல்துறையினர் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முதல்வர் மாணிக் சர்க்காரை கொல்பவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என உலக ஆண்ட்டி கம்யூனிஸ்ட் கவுன்சில் என்ற அமைப்பின் பெயரில் ரியா ராய் என்பவர் முகநூலில் பதிவிட்டிருந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்ததில் அது போலி பெயரில் உருவாக்கப்பட்ட முகநூல் இடுகை என்பது தெரியவந்தது. இதனையடுத்து முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த அந்த மர்ம ஆசாமியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த ஆண்டு, மாணிக் சர்க்காரின் ஆறு நிமிட விடுதலை நாள் உரை பதிவுசெய்யப்பட்டு அரசு தொலைக்காட்சிக்கும் அகில இந்திய வானொலிக்கும் அனுப்பப்பட்டது. அந்த உரையில் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் உள்ளன என்றும், எனவே, அந்த உரையை மாற்றுங்கள் என்றும் பிரசார் பாரதியிடமிருந்து முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. முதல்வர் அலுவலகத்திலிருந்து மாற்ற இயலாது என்று பதில் சென்றது. அதனால், விடுதலை நாளன்று காலை 6.30 மணிக்கு ஒலிபரப்பாக வேண்டிய முதல்வர் மாணிக் சர்க்காரின் உரை, ஒலிபரப்பு செய்யப்படவில்லை. என்பது குறிப்பிடத் தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.