Show all

சாம்சங் கேலக்ஸி எம் 12! தரமும் மலிவுமான செல்பேசி என்பதாக ஓடும் பேச்சு

சாம்சங் கேலக்ஸி எம் 12 செல்பேசி நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். தரமும் மலிவுமான செல்பேசி என்பதான கருத்து இதன் மீது பதிவு செய்யப்பட்டு வருகிறது.

28,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எம்-வரிசை மிடுக்குப் பேசியை நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம் 12 என்ற புதிய மிடுக்குப்பேசி மாதிரி 6,000 எம்ஏஎச் மின்கலத்துடன், 6.5 அங்குல திரையுடன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீகிதம் மற்றும் 48 எம்பி குவாட் பின்பக்க படபிடிப்பு கருவியுடன் வருகிறது. 

சாம்சங் கேலக்ஸி எம் 12 மிடுக்குப்பேசியில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பகம் கொண்ட வகையின் விலை ரூ. 10,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பகம் கொண்ட வகையின் விலை ரூ. 13,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த புதிய சம்சங் மிடுக்குப்பேசி, ‘தமிழில் அமேசான்’ என்று பெருமை கொண்டாடும் வலைத்தளத்தின் வழியாக வியாழக்கிழமை முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை கடைகளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சாம்சங் கேலக்ஸி எம் 12 மிடுக்குப்பேசி கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும். இந்த புதிய மிடுக்குப்பேசி மிகநேர்த்தியான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.