மீண்டும் தமிழ்ச் சமுதாயத்தை வெள்ளையர் வரவுக்கு முன்பிருந்த, அடிமை நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. நடுவண் பாஜக அரசு நேற்று நிறைவேற்றியுள்ள புதிய கல்விக் கொள்கை மூலம். 16,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: மீண்டும் தமிழ்ச் சமுதாயத்தை வெள்ளையர் வரவுக்கு முன்பிருந்த, அடிமை நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. நடுவண் பாஜக அரசு நேற்று நிறைவேற்றியுள்ள புதிய கல்விக் கொள்கை. இந்தப் புதிய கல்விக் கொள்கையால், தமிழகம் சுமக்க வேண்டிய சுமைகளும், இழப்புகளும் 2. ஹிந்தியை தாய்மொழி தேனுடன் கலந்து புகட்டும் முயற்சி:-இரண்டு முதல் எட்டு வயது வரையிலான காலகட்டத்தில் மொழிகளை குழந்தைகள் வேகமாக கற்றுக் கொள்ளும் திறனுடன் இருப்பார்கள் என்பதாலும், பன்மொழி அறிவு இளம் மாணவர்களுக்கு அதிகமான அறிவுசார் பயனளிக்கும் என்பதாலும், தாய்மொழி அல்லாமல் வேறு இரு மொழிகளிலும் எழுதவும் படிக்கவும் மூன்றாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள மாணவர்கள் பயிற்றுவிக்கப் படுவார்கள் என்றும் புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 3. முன்பு பதினொன்றாம் வகுப்பிலும், தற்போது பத்தாம் வகுப்பிலும் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சியிழந்த மாணவர்களில் பெரும்பாலானோர் மேற்கொண்டு மேல்நிலைக் கல்வியை தொடராத நிலை புள்ளிவிவரங்களில் தேடக் கிடைக்கிறது. தற்போது அந்தத் தடைப்படியை ஐந்தாம் வகுப்போடோ, எட்டாம் வகுப்போடோ தொடருவதற்கான வகைக்கானது நடுவண் பாஜக அரசின் புதிய கல்வித்திட்ட முயற்சி:- 4. ‘ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு’ என்பது போல ‘ஒரே தேசம் ஒரே கல்வித் திட்டம்’ என்பது இந்த புதிய கல்விக் கொள்கை மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. அதன் பின்னர் அது பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதாவது கல்வி மீதான முடிவெடுக்கும் அதிகாரம் மற்றும் சட்டமியற்றும் அதிகாரம் நடுவண் அரசு, மாநில அரசு ஆகிய இரண்டு அரசுகளுக்குமே உண்டு என வழிவகை செய்யப்பட்டது. ஆனால் பொதுப் பட்டியல் என்று வரும்பொழுது அதில் இரண்டு அரசுகளுமே இருப்பதால் நடுவண் அரசின் கைதான் ஓங்கி இருக்கும். இந்தப் புதிய கல்விக் கொள்கை மாநில அரசுக்கு கிஞ்சித்தும் கல்வியில் உரிமை இல்லாமல் செய்கிறது. உலகம் முழுவதும் 197 நாடுகள் இருக்கின்றன அவற்றில் சுமார் 170க்கும் மேலான நாடுகளில் மக்கள்தொகை தமிழகத்தை விடக் குறைவானது. தமிழகம் உள்ளிட்ட எந்த இந்திய மாநிலத்தையும் ஒரு மாநிலமாக மட்டுமே பார்க்க முடியாது. தனக்கென ஒரு மொழி, நிலவியல் அமைப்பு, பண்பாடு என தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் தனித்தனி தேசிய இனங்களுக்கான இடமாக இருக்கின்றன. ஆனால், இந்த புதிய கல்விக்கொள்கை- நடுவண் அரசால் கட்டுப்படுத்துவதாக அமைந்து- பார்ப்பனியக் கலாச்சாரத்திற்குள் இந்த தேசிய இனங்களுக்கான அடையாளம் மூழ்கடிக்கப்படும். 5. இதன்படி வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் எந்த மாநிலத்தில் அல்லது மாவட்டத்தில் அவர்களது கல்வி நிறுவனத்தை நிறுவுகிறார்களோ அங்கு அனுமதி பெற வேண்டிய தேவை இருக்காது. நேரடியாக இந்திய அரசிடம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம். ஒரே இடத்தில் குவிந்துள்ள முடிவெடுக்கும் அதிகாரம் என்பது அதிகமான ஊழலுக்கு வழிவகுக்கும். 6. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வேலைத் திட்டத்தின்படியே இந்த கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருப்பதாகக் கல்விச் செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பான பாரதிய சிக்ஸான் மண்டல் இந்த புதிய கல்விக் கொள்கையை வரவேற்றுள்ளது. தங்களது 60 சதவீத ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 7. இந்த கல்விக் கொள்கை மாநில உரிமைகளைப் பறிப்பதற்கான தலைமைத்துவமான நடவடிக்கை:- எளிய மாணவர்களை உயர் பதவிகளுக்கு வராமல் தடுக்கும், கூலிகளாக்கும் கல்வி திட்டம் இது. இது முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றார் போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது, என்கிறார் ஒரு கல்விச் செயல்பாட்டாளர். இன்றைய சமூக வளர்ச்சியை முன்னெடுத்திருக்கிற பெரும்பாலான நாடுகள் ஒற்றை மொழியை மட்டுமே தூக்கிப்பிடிக்கிற நாடுகளாவே இருக்கின்றன. இந்தியாவை அப்படி ஒற்றை மொழி நாடாக்கிட வேண்டும் என்பது பாஜகவின் கனவுத்திட்டம். ஆனால் அந்தந்த வளர்ச்சி அடைந்த நாடுகளின் ஒற்றை மொழி அந்தந்த நாடுகளின் தாய்மொழியே. ஆனால் இங்கே மூன்றாவது மொழியான ஹிந்தியை அல்லது சமஸ்கிருத்தை ஒற்றை மொழியாக்கும் பாஜக அறிவு எள்ளி நகையாடலுக்கு உரியதாகும். மூன்று மொழிகள் கற்க வேண்டும் என்பது குழந்தைகளின் சுமையைத்தான் அதிகரிக்கும்.
1. திராவிட இயக்கங்களின் முயற்சியால் தற்போது ஆய்வுக் கல்வி வரை ஆதரவு பெற்றிருக்கிற தமிழ் வழிக்; கல்வியை முளையிலேயே கிள்ளி எறியும் வகைக்கானது நடுவண் பாஜக அரசின் புதிய கல்வித்திட்ட முயற்சி:-
தமிழகம் போன்ற மாநிலங்களில் பள்ளிக் கல்வி முடித்த பின்பு உயர்கல்வி வரை கூட தமிழ் மொழியிலேயே படிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் ஐந்தாம் அல்லது எட்டாம் வகுப்பு வரையில் மட்டுமே தாய்மொழிக் கல்வி என்று குறிப்பிடப்பட்டு இருப்பதன் மூலம் உயர்கல்வியை தாய்மொழி மூலம் அல்லது உள்ளூர் மொழி மூலம் படிப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும்.
பள்ளிக்கல்வியில் சமஸ்கிருத்துடன், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பாலி, பாரசீகம் பிரகிருதி உள்ளிட்ட மொழிகள் விருப்ப மொழிகளாக இருக்கும்.
மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்திய மொழிகள், ஆங்கிலம் மட்டுமல்லாது சீன மொழி, பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய மொழி, கொரிய மொழி உள்ளிட்ட வெளி நாட்டு மொழிகளும் விருப்ப மொழிகளாக விருப்பப் பாடங்களாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உயர் கல்விக்கான ஆணையம்தான் உயர் கல்வியைத் தீர்மானிக்கும் என்கிறது இந்த புதிய கல்விக் கொள்கை. அப்படியானால் பல்கலைக்கழகத்திற்கு இருக்கும் உரிமையும், அந்த பல்கலைக்கழகத்தைக் கட்டுப்படுத்தும் மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமையும் இல்லாமல் போய்விடும் என்கின்றனர் கல்விச் செயல்பாட்டாளர்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



