Show all

கடந்த ஆண்டு 7,000 பெரும்பணக்காரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர்

22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகம் முழுவதும் பெரும் பணக்காரர்களாக உள்ளவர்கள் ஒரு நாட்டினை விட்டுப் பிற நாட்டுக்கு வெளியேறுவது என்பது ஒவ்வொரு ஆண்டும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகிறது.

அப்படிச் சீனாவில் இருந்து அதிகபட்சமாக வெளியாகியுள்ளதாகவும் அதற்கு அடுத்த இடத்தில் இந்தியா என்றும் தரவுகள் கூறுகின்றன. எனவே எந்த நாடுகளில் இருந்து அதிகமாக வெளியேறியுள்ளார்கள், எந்த நாடுகளுக்கு அதிகமாகச் சென்றுள்ளார்கள் என்ற விவரங்களை இங்குப் பார்க்கலாம்.

உலகச் செல்வம் என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 7,000 நபர்கள் வெளியேறியுள்ளனர்.

முதல் இடம் பிடித்துள்ள சீனாவில் இருந்து கடந்த ஆண்டு 10,000 பெரும் பணக்காரர்கள் வெளியேறியுள்ளனர்.

துருக்கியில் இருந்து 6,000 நபர்களும், ஐக்கிய நாட்டில் இருந்து 4,000, பிரான்ஸ் 4,000 மற்றும் ரஷிய கூட்டமைப்பு 3,000 நபர்கள் என வெளிநாடுகளுக்குக் பெரும் பணக்காரர்கள் குடிபெயர்ந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு 10,000 பெரும் பணக்காரர்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.

மேலும் கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் செல்வ மதிப்பானது 83 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. அமரிக்காவில் 20 விழுகாடு

அமெரிக்கா 9,000, கனடா 5,000 மற்றும் ஐக்கிய அமீரகம் 5,000 நபர்கள் என கடந்த ஆண்டுக் பெரும் பணக்காரர்கள் இந்த நாடுகளுக்குப் புதிதாக வந்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,688

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.