Show all

பாஜவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பீகாரில் லாலு நடத்தும் பிரம்மாண்ட பேரணி

பீகாரில் லாலுவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட முதல்வர் நிதிஷ்குமார் பாஜகவுடன் இணைந்து ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில், நடுவண், மாநில அரசுகளை எதிர்க்கும் முனைப்பில் லாலு பிரசாத் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, வருகிற 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், பாஜவுக்கு எதிராக இந்திய அளவிலான எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மாநிலக் கட்சிகளின் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் வகையிலான பிரமாண்ட பேரணிக்கு லாலு ஏற்பாடு செய்துள்ளார்.

வருகிற 27 அன்று தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ள இந்தப் பேரணியில் தலையாய தலைவர்கள் பலர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நிதிஷ்குமாருக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

பகுஜன் சமாஜ் சார்பில் அக்கட்சியின் பொது செயலாளர் சதிஷ் சந்திரா மிஷ்ரா, காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், பங்கேற்கின்றனர்.

பீகாரில் தற்போது கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பேரணி நடப்பதற்கு ஒருநாள் முன்னதாக மோடி இங்கு வந்து வௌ;ள பாதிப்பை பார்வையிடுவது ஏன்? என்றும், மேலும், கடந்த ஆண்டு ஏற்பட்ட வௌ;ளப்பெருக்கின்போது மோடி ஏன் வரவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் லாலு.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.