22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சி மாநில தலைவரும், முதல்வர் வேட்பாளருமான, எடியூரப்பா வெளியிட்டார். தமிழக திமுக, அதிமுகவை நகல் எடுப்பது போல, பெண்களை குறிவைத்து, தாலிக்கு தங்கம், இலவச மிடுக்குப்பேசி போன்ற பல கவர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் திமுகவும், அதிமுகவும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், எப்போதும் நாற்பத்தைந்துக்கு குறையாத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று விடும். பாஜக வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற பழக்கமே கிடையாதே. மாறாக தமிழிசை, பொன்னர், சு.சாமி, ராஜாஷர்மா போன்றவர்களை வைத்து வாக்குறுதி நிறைவேற்றக் கேட்பவர்களை யெல்லாம் தேசத் துரேகிகளாக சித்தரிக்க முயலுமே. பாஜக வாக்குறுதிகளை வைத்து கர்நாடக மக்கள் ஓட்டுப் போடுவார்களானால் அவர்களே பெரிய ஏமாளிகள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,778.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.