11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத் நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, தலைமை அமைச்சர் நரேந்திர மோடி குஜராத் மாநில புஜில் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இன்று உரையாற்றினார். ‘நான் தேநீர்தான் விற்றேன், ஆனால் நாட்டை விற்பனை செய்யவில்லை’ என அவர் பொது மேடையில் பேசியது அவர் கட்சிக்காரர்களுக்கே நெருடலாக இருந்தது. ஏன் இவராகவே நாட்டை விற்பனை செய்யவில்லை என்று பேசவேண்டும் என்று எதிர்கட்சிகளும், பொது மக்களும் கிண்டலடிக்கிறார்கள். காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் மீது கடுமையான தாக்குதலை தொடுத்த பிரதமர் மோடி என்னுடைய ஏழ்மையான பின்னணியை கேலி செய்யாதீர்கள் என்றார். மோடி தன்னை ஏழ்மையான பின்னணி உள்ளவர் என்று கூறுவது இயல்பு சார்ந்து இல்லையே என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் இப்;;;;;;;;;;;பொழுது தாம் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். நாங்கள் விலையேற்றத்தை வீழ்த்தினோம். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வளர்ச்சி மட்டுமே. வளர்ச்சி தொடர்ந்து இருக்க வேண்டும் என்றால் குஜராத் மக்களுக்காக நாங்கள் இன்னும் கூடுதலாக வேலை செய்ய வேண்டும். என்று வேடிக்;கையாக பேசினார். “நான் ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்டதால் காங்கிரசுக்கு என்னை பிடிக்கவில்லை. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தலைமை அமைச்சர் ஆனதற்காக ஒரு கட்சி இப்படி கீழ்தரமாக நடந்துக் கொள்ள முடியுமா? என்றார். ஏழைகளையும், என்னுடைய ஏழ்மையான பின்னணியையும் காங்கிரஸ் கேலி செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுக்கிறேன் என்று கூறினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,619
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



