Show all

ஆட்சியில் பங்கு கேட்கிறது பாஜக! அதிமுக அதற்கும் தயார்தானா?

‘ஒன்றியத்தில் கூட்டாட்சி தமிழகத்தில் தன்னாட்சி’ என்பதுதான் திராவிட இயக்கங்களின் கொள்கையே. ஆனால் ஆட்சியில் பங்கு கேட்கிறது பாஜக. அதிமுக அந்த அடிமைத்தனத்திற்கும் தயார்தானா? என்பது தமிழக மக்கள் கேள்வியாகி; அதிமுகவை தமிழகம் தோற்கடிக்கும் என்பது தொடர்ந்து ஒவ்வொரு கருத்துக் கணிப்பிலும் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.
 
30,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து ஆட்சியமைக்கும்போது, தங்களுக்கும் அதில் பங்கு இருக்க வேண்டும் என பாஜக விருப்பத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிமுக அந்த அடிமைத்தனத்திற்கும் தயார்தானா? என்பது தமிழக மக்கள் கேள்வியாகி; அதிமுகவை தமிழகம் தோற்கடிக்கும் என்பது தொடர்ந்து ஒவ்வொரு கருத்துக் கணிப்பிலும் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனாலும் வாக்கு எண்ணிக்கை என்ற கத்தி அரசியல் கட்சிகளின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில், அதிமுக மீண்டும் ஆட்சியமைத்தால் பாஜக ஆட்சியில் பங்கு கேட்பதான செய்தியும்- பாஜகவின் எதையும் செய்யும் துணிச்சலும்தான், அரசியல் கட்சிகளின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற வாக்கு எண்ணிக்கை கத்தியோ என்று குடிஅரசு பாதுகாக்கப்பட வேண்டுமே என்பதாக மக்களுக்கு ஒரு அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடுள்ள இந்த ஐந்து சட்டமன்றங்களில் பாஜக எந்த தில்லாலங்கடியும் எடுக்காமால் இருந்தால் மட்டுமே, பாஜகவிடம் இருந்து இந்தியாவை மீட்பதற்கான மாற்று சக்தியை உருவாக்க முடியும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

‘ஒன்றியத்தில் கூட்டாட்சி தமிழகத்தில் தன்னாட்சி’ என்பதுதான் திராவிட இயக்கங்களின் கொள்கையே. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வென்றாலும் ஒன்றிய அமைச்சரவையில் பங்கு கேட்கும் உரிமையை தௌ;ளத் தெளிவாக பதிவு செய்து வைத்திருக்கின்றன திராவிடக் கட்சிகள், ஆனால் ஒன்றிய ஆட்சிக்கு முனையும் கட்சிகளுக்கு மாநிலத்தில் ஆட்சியில் பங்கு மாநிலத்திற்காக கட்சி என்கிற அடிப்படைக்கே ஆப்பு ஆகிவிடும் என்பதைத் திராவிடக் கட்சிகள் தெளிவாக வரையறுத்து வைத்துள்ளன. 

இந்தச் சூழலில், அண்மையில் அமைச்சர்களைத் தனது இல்லத்துக்கு அழைத்துப் பேசிய முதல்வர் எடப்பாடி, ஒருவேளை அதிமுக ஆட்சி தொடருமேயானால், பாஜக துணை முதல்வர் பதவியை எதிர்பார்க்கிறது என்று கூறியிருப்பதாக அறியமுடிகிறது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.