Show all

வானொலியில் மோடி வாசிப்பது மனதின் குரலா? மக்களை ஏய்க்கும் பம்மாத்துக்களா

13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம், மனதின் குரல் நிகழ்ச்சியில்   பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 

இன்றைய உரைக்கு அவர் எடுத்துக் கொண்ட பொருள் 'உலகச் சுற்றுச்சூழல் பாதிப்பு' 

இன்றைய உரையில் அவர், உலகச் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எதிராக தமிழகத்தில் 14 கிராம மக்கள் ஒன்று திரண்டு 99 நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி 100வது நாள் போராட்டத்தில் தமிழக அரசு காவல் துறையை ஏவி 13பேர்களை துடிக்க துடிக்க கொன்றிருக்கிறது. 70க்கு  மேலானவர்களை காயப்படுத்தியிருக்கிறது.

அவர்களுக்கான அஞ்சலியோடு நான் பேச்சை தொடங்குகிறேன்... என்றும்,

இதே போல கடந்த முறை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் நடுவண் அரசு இழுத்தடித்துக் கொண்டிருந்த நேரத்துப் பேச்சில் அவர் எடுத்துக் கொண்டிருந்த பொருள் விலங்குகள் தண்ணீர் தேவை குறித்தானது: அப்போதைய  பேச்சில், நமது நாட்டில் நீர் பகிர்மானம் சரியாக மேற்கொண்டாலே இயற்கை வளம் பெற்று தொடர்ந்து மழை பெய்யும் விலங்குகளுக்கு போதிய நீர் தானக கிடைக்கும் என்றும்; கர்நாடகத் தேர்தலைக் காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருப்பது குற்றவுணர்வாக இருக்கிறது... என்றும் தொடங்க வேண்டிய பேச்சுகள் மனதின் குரல் என்றால் அப்படித் தொடங்கியிருக்க வேண்டும் ஆனால் இவைகள் மோடியின் பம்மாத்துக்களானதால் அன்று பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் வாசலில், வெளியில் அண்டாவில், குண்டாவில், தட்டில் நீர் வையுங்கள் என்று கொசு உற்பத்திக்கு வழி சொன்னார். 

இன்றைக்கு: திடீரென பருவநிலை மாற்றம் ஏற்படுவதற்கு, மிக தலைமைக் காரணம், சுற்றுச்சூழல் சீர்கேடு. கடுமையான வெயில், அளவில்லாத மழை, வெள்ளம் மற்றும் அதிகமான குளிரால் பாதிக்கப்படும்போது புவி வெப்பமயமாதலைப் பற்றியும், பருவநிலை மாற்றத்தை பற்றியும் பேசுகிறோம். எனினும், இதுபோன்ற வெறும் பேச்சால் மட்டும் பிரச்சினையை தீர்க்க முடியாது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இயற்கைச் சூழலை பராமரிக்கவும் தேவையான அக்கறை வேண்டும்.

இயற்கை, வனவிலங்குகளின் வாழ்க்கை, மக்களின் உடல்நலம் என பலதரப்பிலும் நெகிழி மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.

என்று பேசினார். ஆலைக் கழிவுகள் கார்ப்பரேட்டுகள் தலைப்பில் வருவதால் அவற்றைப் பற்றி அவருக்கு கவலை இல்லை.

உண்மையில் இது மோடியின் மனதின் குரல் அல்ல் மக்களை ஏமாற்றும் பம்மாத்து.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,800. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.