13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நிவாரண நிதியை உயர்த்தி வழங்க கோரும் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதையொட்டி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் நிவாரண நிதியை 20 லட்சமாக உயர்த்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனடிப்படையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை உயர்த்தி, 20 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கவும், துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 3 லட்சம் ரூபாயை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை ஒன்றரை லட்சம் ரூபாயாக உயர்த்தியும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,800.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



