12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இதற்கிடையே, கன மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உருக்குலைந்து போன கேரள மாநிலம் மெதுவாக தனது இயல்பு திரும்பி வருகிறது. கேரளாவை சீரமைப்பதற்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில், கேரள மாநிலத்துக்கு இந்தியன் வங்கி சார்பாக ரூ. 4 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனை, இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் ஏ.எஸ்.ராஜீவ் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, இந்த நிதியை அவரிடம் வழங்கினார். மற்ற வங்கிகள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள், இதை பின்பற்றலாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,893.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



