Show all

இயங்கலை பத்திர பதிவு விண்ணப்பத்தின் முகப்பு பக்கத்தில் ஆங்கிலம் கிடையாது! தமிழக அரசு திட்டவட்டம்

11,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இயங்கலைப் பத்திரப்பதிவு முறையில் மென்பொருள் மேம்படுத்தப்பட்டதை அடுத்து, தமிழில் மட்டுமே பத்திரப்பதிவு செய்யும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. அதில், ஆங்கில மொழியையும் இணைக்கக் கோரி பிரகாஷ்ராஜ் என்ற ஒருநபர் மனு பதிகை செய்தார்.

மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பிலிருந்து, ஆங்கிலத்தை சேர்க்கத் தேவையில்லை என்பது அரசின் கொள்கை முடிவு என்றும் அதனால் ஆங்கிலத்தைச் சேர்க்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப் பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை வரும் வியாழக் கிழமைக்கு ஒத்திவைக்கப் பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,892.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.