30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜ நாகத்தின் நஞ்சுக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அடிமையாகியுள்ளனராம் பல ஆண்டுகளாகப் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்கள். ஏதோ ஒரு சூழலில் ராஜ நாகத்தின் நஞ்சுக்கும் அவர்கள் அடிமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது ராஜ நாகத்தைப் பிடித்து அவர்களின் நாக்கில் கடிக்க வைத்து அந்த நஞ்சை உடலில் ஏற்றிக் கொள்வார்களாம். ராஜ நாகத்தின் நஞ்சு எந்தப் போதைப் பொருளாலும் கொடுக்க முடியாத மயக்கத்தைக் கொடுப்பதாக அந்த இளைஞர்கள் ஆராய்ச்சியாளர்களிடம் கூறியுள்ளனர். அவர்களின் வாக்குமூலம் ஆராய்ச்சியாளர்களையும் மருத்துவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த இரண்டு இளைஞர்களும் தற்போது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,911.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



