Show all

மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் சாப்பிடுவேன்: சித்தராமைய்யா

நான் இதுவரை மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை இனிமேல் சாப்பிடப்போகிறேன் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இது நாள் வரை நான் மாட்டிறைச்சி சாப்பிட்டது இல்லை. ஆனால் நான் மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் சாப்பிடுவேன். அதை யாராலும் தடுக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த நாள் வரை நான் மாட்டிறைச்சி சாப்பிட்டது இல்லை. ஆனால் நான் மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், நான் சாப்பிடுவேன். அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது அது என் உரிமை.

பசு மாட்டிறைச்சி விற்கப்படுவதாக புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து கேரள ஹவுசில் காவல்துறையினர் சோதனை நடத்தியபோது நான் டெல்லியில்தான் இருந்தேன்

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு தெரியாமல் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது என்பதற்கு இது உதாரணமாக உள்ளது. பா.ஜ.க. ஆட்சியில் சகிப்புத்தன்மை இல்லாமல் போய்விட்டது. மாட்டிறைச்சி விவகாரம் இதைத்தான் காட்டுகிறது என்றார்.

மாட்டிறைச்சி சாப்பிடுவது தொடர்பான விவகாரம் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்திருப்பது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.