வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சிப்போம் என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார். நாடாளும் மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான கார்த்திக் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பிறகு நிருபர்களிடம் பேசிய கார்த்திக், 95 சதவீதம் முக்குலத்தோர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள். அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி ஏற்படுத்த முடியவில்லை. ஆனால், வருகின்ற சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சிப்போம். முதல்வர் ஜெயலலிதா கோகினூர் வைரம் போன்ற குணமுடையவர். நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தலில் பெரிய கட்சிகள் கூட்டணி அமைக்காமல் தனித்து நின்றால், அதிமுகதான் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.