Show all

அருண்ஜெட்லியின் வரவு-செலவு அறிக்கைக்கு எத்தனை மதிப்பெண்

19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதிகை செய்துள்ள மோடி தலைமையிலான அரசின் வரவு-செலவு திட்டத்திற்கு நீங்கள் அளிக்க விரும்பும் மதிப்பெண் எவ்வளவு என்று, இந்து நாளிதழ், இணையத்தில் பொது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.

இந்தச் செய்தியை நாம் பதிவு செய்யும் நேரம் வரை

0 லிருந்து 24 மதிப்பெண்கள் என்று 72விழுக்காட்டினரும்,

25 லிருந்து 49 மதிப்பெண்கள் என்று 15 விழுக்காட்டினரும்,

50 லிருந்து 74 மதிப்பெண்கள் என்று 7 விழுக்காட்டினரும்,

75 லிருந்து 100 மதிப்பெண்கள் என்று 6 விழுக்காட்டினரும்,

வாக்களித்துள்ளனர். இன்று மதிப்பெண் வழங்குகிற மக்கள், நாளை நல்ல தீர்ப்பும் வழங்கப் போகிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,685

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.