இன்று காலை 11மணிக்கு நாடாளுமன்றத்தில் நடுவண் வரவு-செலவுத்திட்டம் பதிகை செய்யப்பட உள்ளது. சோதிட அடிப்படையிலாவது ஏதாவது ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லப் பட்டிருக்குமா வென்று பார்ப்போம். பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று, தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசின் நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றார். அவர் நடப்பு மற்றும் அடுத்த நிதி ஆண்டுக்கான முழு வரவு-செலவுத் திட்டத் தயாரிப்பு பணியில் ஈடுபட்டார். இன்று நடுவண் வரவு-செலவு திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் காலை 11 மணிக்கு பதிகை செய்து பேசுகிறார். கடைசியாக தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு, பாரதீய ஜனதா கட்சி முதலில் ஆட்சிக்கு வந்த 2014–ம் ஆண்டு, ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு முறையும் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்த்து அனைவரும் ஏமாற்றத்தையே சந்தித்து வந்துள்ளனர். இந்த 5 ஆண்டு காலத்தில் விலைவாசி விண்ணோடும், முகிலோடும் போட்டி போடுகிற அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், இன்னும் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2½ லட்சம் என்பது ஏற்புடையதாக இல்லை என்பது சிறு தொழில் முனைவோர்கள் மற்றம் மாதச்சம்பளதாரர்களின் ஆணித்தரமான கருத்தாக அமைந்துள்ளது. இந்த ரூ.2½ லட்சம் என்பதை இரண்டு மடங்காக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஆனாலும், ரூ.2½ லட்சம் என்பது ரூ.3 லட்சம் என்ற அளவில் உயர்த்தப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வருமான வரி சட்டம் பிரிவு 80–சியின் கீழ் அளிக்கப்படுகிற வரி விலக்கு வரம்பு ரூ.1½ லட்சமாக உள்ளது. இது ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை செய்கிறபோது தனிநபர் சேமிப்பு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கிறபோது அதை வளர்ச்சித்திட்டங்களுக்கு முதலீடாக பயன்படுத்த வழி பிறக்கும். சரக்கு- சேவை வரியை முழுiமாயாக இரத்து செய்து விட்டு மீண்டும் வரி வாங்கும் உரிமை மாநிலங்களிடமே ஒப்படைக்கப் பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கெல்லாம் வாய்ப்பேயில்லை என்பது தெரிந்த கதைதான். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,204.
20,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது முதல் வரவு-செலவுத் திட்டத்தை பதிகை செய்கிறார். நிதி- நிர்மலா மேனைப் பொருத்தம் மகிழ்ச்சி தருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.