Show all

ரூ.128,45,95,444 மின் கட்டணம் விதித்து, கட்டணம் செலுத்தாததால், மின்இணைப்பு துண்டிப்பு! அது வீட்டு மின்இணைப்பு.

யோகி ஆதித்தியாநாத் முதல்வராக இருக்கும் பாஜக அரசு மின் வாரியத்தின் மின் கட்டணக் குளறுபடி செய்தி, நாடு முழுக்க தீயாகி வருகிறது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சமிம் என்பவருக்கு, விட்டு மின் இணைப்புக்கு ரூ.128,45,95,444 மின் கட்டணம் விதித்து, கட்டணம் செலுத்தாததால், மின்இணைப்பு துண்டிப்பு செய்யப் பட்டுள்ளது.


05,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்த மாதம் மின் கட்டணம்- நூற்று இருபத்தெட்டு கோடியே, நாற்பத்தைந்து இலட்சத்து, தொன்னூற்று ஐந்தாயிரத்து, நானூற்று நாற்பத்து நான்கு ரூபாய் வந்துள்ளது, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் சமிம் என்பவருக்கு. 

ஓ மிகப் பெரிய தொழிற்சாலை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறாரா சமீம் என்று பார்த்தால், இவர் தனது மனைவியுடன் ஹப்பூர் சாம்ரி கிராமத்தில் வசித்துவருகிறார். தனது சிறிய வீட்டிற்கு 2கிலோ வாட் மின் இணைப்பு பெற்றிருக்கிறார். 

ஏதாவது தொழில்நுட்பக் கோளாறாக இருக்கும் என எண்ணிய சமிம், இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். ஆனால், மின்வாரிய அதிகாரிகளால் அந்தத் தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர் ஒரு நகரத்துக்கான மின்சாரக் கட்டணத்தை என்னை செலுத்தச் சொன்னால், என்னால் எப்படி முடியும்? என்று கேட்டு மின்சாரக் கட்டணத்தை செலுத்தாததால், அவரது வீட்டுக்கு வழங்கியிருந்த மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்துள்ளனர். 

இதுதொடர்பாக துணை மின் பொறியாளர் ராம் சரண் அவர்களிடம் கேட்கையில், மின் இணைப்பைத் துண்டித்ததை நியாயப் படுத்தும் வகையாக, சமீம் மின் கட்டண ரசீதைக் கொடுத்தால், கணினியில் உள்ள தொழில்நுட்பப் பிழைகளைச் சரிசெய்து, புதிய ரசீதை வழங்குவோம். இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை; தொழில்நுட்பத் தவறுகள் நடப்பது இயல்புதான் என்கிறார். இது இந்தியா அளவில் செய்தியான பிறகு. 

இது தொடர்பாக முதியவர் சமிம் கூறுகையில், மின்சார ரசிதில் பிழை இருப்பதாகவும், அதனை சரி செய்ய மின்சாரத் துறையை அணுகியதாகவும், ஆனால், ரசீதில் இருக்கும் கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறுகிறார்.

“எங்கள் கோரிக்கைக்கு யாரும் செவிசாய்க்க வில்லை, அவ்வளவு பெரிய தொகையை நாங்கள் எப்படி கொடுப்போம்?. வீட்டில் மின்விசிறி மற்றும் குழல்விளக்கு தவிர எதுவும் பயன்படுத்தப்படுவது இல்லை. கட்டணம் செலுத்த தவறிய நிலையில், வீட்டுக்கு வழங்கிய மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது என எங்களுக்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்” என்று மேலும் சமிம் கூறியுள்ளார்.

மின்சார வாரிய அதிகாரிகளே- தவறுக்கு விளக்கம் அளித்து மன்னிப்பு கோரி மின் இணைப்பை திரும்பத் தரவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், சமிம் மீண்டும் மின்வாரியத்திற்கு மின்கட்டண ரசீதுடன் சென்று பிழையைத் திருத்தச் செய்து மின் இணைப்பு பெற்றுக் கொள்ள முயல்வாரா? அல்லது முறையிட்டும் மின் இணைப்பைத் துண்டித்த அவர்களே நடவடிக்கை எடுக்கட்டும் என்று தொடர்ந்து போராடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,220.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.