தென்மேற்கு பருவமழை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வருகைதரும் நீரின் அளவு 8300 கனஅடியாக உயர்வு 05,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தென்மேற்கு பருவமழை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் வருகைதரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 4 ஆயிரத்து 800 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 3 ஆயிரத்து 500 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது. மொத்தமாக 124 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 90 அடியாக உள்ளது. 84 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர் மட்டம் 69 அடியாக உள்ளது. இரு அணைகளுக்கும் வரும் நீரின் அளவு அதிகரித்துள்ள நிலையில், இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு 8 ஆயிரத்து 300 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,220.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



