ஜெய்ஹிந்த் என்று முன்னெடுக்கும் முழக்கத்தில் உள்குத்து இருக்கிறது என்று மொழிஅறிஞர்கள் நிறுவி வந்த நிலையில், சட்டமன்ற ஆளுநர் உரையில் ஜெய் ஹிந்த் இடம்பெறாமை, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சாவிற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது. 13,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரையில், வழக்கமாக இடம்பெறும், ஜெய் ஹிந்த் என்ற முழக்கச் சொல்லாடல் இடம் பெறாதது, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சாவுக்கு அதிர்ச்சியை எற்படுத்தியிருப்பதாகப் பேசப்படுகிறது. ஒன்றிய அரசை மத்திய அரசு என்றும், அதன் தமிழாக்கமாக நடுவண் அரசு என்றும் உரையாடுவது பிழை என்று நீண்ட காலமாகத் தமிழ் அறிஞர்கள் தெரிவித்தும், ஒன்றிய அரசு என்றே பயன்படுத்தியும் வந்திருந்தனர். தற்போது தமிழ்நாட்டின் அரசில் பொறுப்பேற்றிருக்கிற முதல்வர் ஸ்டாலின் அதை அங்கீகரிக்க, தற்போது தமிழ்நாட்டின் அனைத்து ஊடகங்களும் ஒன்றிய அரசு என்றே எழுதத் தொடங்கி விட்டன. அதுபோலவே வடஇந்தியக் கட்சிகளின் தமிழ்நாட்டுக் கிளைப் பொறுப்பாளர்கள், வாழ்க இந்தியா என்று சொல்லுவதாகத் தெரிவித்து, ஜெய்ஹிந்த் என்ற முழுக்கச் சொல்லாடலை உரை வீச்சு, மற்றும் கூட்டங்களுக்கு இறுதியில் பயன்படுத்தி வந்தனர். அதை அவர்கள் வாழ்க இந்தியா என்றே முழக்கமிட்டால் பிழையேதும் இல்லை. ஆனால் அவர்கள் ஜெய்ஹிந்த் என்று முன்னெடுக்கும் முழக்கத்தில் உள்குத்து இருக்கிறது என்று மொழிஅறிஞர்கள் நிறுவி வந்தனர். இந்தியா என்பது தமிழ் சொல்லான நாவலந்தேயத்தை ஐரோப்பியர் ‘ந்தேயா’ என்று ஒலித்துப் புரிந்து கொண்டு இந்தியா என்று நிறுவியது. இதன் காரணம் பற்றி வட இந்தியர்கள் யாரும் ஹிந்தியிலோ, வட இந்தியாவின் எந்த மொழியிலும் இந்தியா என்று எழுதவே மாட்டார்கள். மாறாக பாரத் என்றே எழுதுவார்கள். பாரதிய ஜனதா கட்சி, பாரதிய ராஷ்டிரிய காங்கிரஸ், பாரதிய ஸ்டேட் பைங், பாரதிய ரிசர்வ் பைங், என்றுதாம் ஹிந்தியிலும் வட இந்தியாவின் எந்த மொழியிலும் எழுதுவார்கள். உலக மொழிகள் அனைத்திலும் இந்தியா என்று எழுதப் படுகிறது. இந்தியா என்ற சொல்லுக்கு நாவலந்தேயம் என்ற தமிழ்ச் சொல் வேர் வழங்கிய காரணம் பற்றி, இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் இந்தியா என்று எழுதப்படுகிறது. ஹிந்தியை இந்தி என்றும், ஹிந்து மதத்தை இந்து மதம் என்றும் தமிழ்ப் படுத்தி வழங்குவதால் இவைகளோடு இந்தியா என்;;ற சொல்லுக்கும் தொடர்பு இருப்பது போல் தமிகத்தில் ஒரு மயக்கம் இருப்பதால், தயவுகூர்ந்து ஹிந்தியையும், ஹிந்து மதத்தையும் மட்டும் தமிழ்படுத்தி எழுதும் முயற்சி வேண்டாம் என்றும் தமிழறிஞர்கள் தெரிவிக்கின்றனர். உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கத்தில் உருவான மொழி ஹிந்தியாகும். ஹிந்திக்கும் ஹிந்து மதத்திற்கும் பெயர்கள் கொடுத்தவர்கள் முகமதியர்கள். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்த, ஆளுநர் உரையில் இடம்பெறாத ஜெய்ஹிந்த்- ஹிந்தியையும் ஹிந்து மதத்தையும் வாழ்த்துவதற்கான முழக்கமேயன்றி இந்தியாவை வாழ்த்துவதற்கான முழக்கமன்று. இனி சட்டமன்றம் கூடும் போதெல்லாம் அவையில் ஜெய் ஹிந்த் என முழக்கமிடும்படி தமிழ்நாட்டின் நான்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தப் பட உள்ளதாக தெரிகிறது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பின், சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தில் இடம்பெற்ற ஆளுநர் உரையில், ‘ஜெய் ஹிந்த்’ இடம்பெறவில்லை என்று ஒன்றிய பாஜக அரசின் உளவுத் துறை தெரிவத்ததாக தெரியவருகின்றது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.