Show all

ஹர்திக் படேலுக்கு 2 ஆண்டுகள் சிறை 50000 அபராதம்! குஜராத் படேல் சமூக இடஒதுக்கீடு போராட்ட வழக்கு

09,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  குஜராத் மாநிலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு படேல் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடந்தது. ஹர்திக் படேல் தலைமையில் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது.

ஹர்திக் படேல் உட்பட 'படிதார் அனாமத் அந்தோலன்' அமைப்பின் தலைவர்கள் மீது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துதல், வன்முறை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது, ஹர்திக் படேல் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் பிணையில்; வெளியே வந்தனர்.

இந்த வழக்கில் விஸ்நகர் அறங்கூற்றுமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. குற்றம்சாட்டப்பட்ட ஹர்திக் படேல் மற்றும் லால்ஜி படேல் ஆகிய இருவருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அறங்கூற்றுவர் உத்தரவிட்டார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,859. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.